இவங்க கொண்டாடுன அளவு படம் இல்ல.. இது படமா?.. சூரியின் கொடுக்காளி பற்றி பிரபலம் இப்படி சொல்லிட்டாரு
சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் இன்று கொட்டுக்காளி திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். நல்ல வரவேற்பை படமானது பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் அந்தணன் படம் குறித்து பேசியிருக்கிறார்.
சினிமாவில் கிடைத்த வேலைகளைஇழுத்துப்போட்டு செய்தார் சூரி. சங்கமம் படத்தின் ஒரு பாடலில் புலி வேஷம் கட்டி மணிவண்ணனோடு ஆடும் சிறுவர்களுக்கு புலி போல் வேஷம் போட்டுவிட்டதுகூட சூரிதான். மேலும் அந்தப் பாடலில் சில நொடிகள் திரையிலும் தோன்றுவார் சூரி. இப்படி தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் தலை காட்டியுள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.

புரோட்டா சூரி: சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை. பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம் சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, வெண்ணிலா கபடிக்குழு படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார். அதனையடுத்து முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறினார் சூரி.
விடுதலை சூரி: காமெடி நடிகராக வலம் வந்த சூரியை வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். கடந்த வருடம்் வெளியான அந்தப் படத்தில் சூரியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள்; அவர் வெறும் காமெடி ஆர்ட்டிஸ்ட் மட்டுமில்லை என்பதை உணர்ந்துகொண்டனர். ஆக்ஷன் காட்சிகளில் அசால்ட்டாக ரிஸ்க் எடுத்திருந்த சூரிக்கு விடுதலை அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. அடுத்ததாக நடித்த கருடன் படமும் மெகா ஹிட்டானது.
கொட்டுக்காளி: கதையின் நாயகனாக சூரி நடித்த விடுதலை, கருடன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் வரவேற்பை பெற்றன. இப்போது வினோத்ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்திருக்கிறார் சூரி. படமானது சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டும் விருதுகளை அள்ளியது. மேலும் திரையுலகினரும் படத்தை ரொம்பவே கொண்டாடினார்கள். இன்று வெளியான படத்துக்கு ரசிகர்களும் தங்களது ஏகோபித்த ஆதரவுகளை கொடுத்திருக்கிறார்கள்.
அந்தணன் பேட்டி: ஆனால் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் படம் பற்றி பேசியிருக்கும் விஷயமோ தலைகீழாக இருக்கிறது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "கொட்டுக்காளி ரொம்பவே சுமாரான படம்தான். படம் நன்றாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் நடப்பதை நன்றாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கொண்டாடிய அளவுக்கு இல்லை. இவர்கள் பேசியதை பார்த்தால் 10 ஆஸ்கர் கொடுப்பது போல் இருந்தது. இதுமாதிரியான படங்களை பாலுமகேந்திராவே எடுத்திருக்கிறார்.
இது படமா?: கேமராவை வைத்துவிட்டு வீட்டுக்கு போய்விடுவார்கள்போல. கேமரா அப்படியே இருக்கிறது. ஒருவர் நடக்கிறார். ஒருவர் மாடு மேய்க்கிறார். ஒருவர் எங்கேயோ நிற்கிறார். இது ஒரு படமா. ஒரு படம் என்பது நகர்த்த வேண்டும்" என்றார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொட்டுக்காளி படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும்போது பத்திரிகையாளர் அந்தணன் இப்படி பேசியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











