Trisha - த்ரிஷாவின் குளியல் வீடியோ.. நடிகர் சங்கத்தின் அமைதிதான் இவ்வளவுக்கும் காரணம்.. அந்தணன் காட்டம்
சென்னை: Trisha(த்ரிஷா) த்ரிஷாவின் விவகாரம் குறித்து பத்திரிகையாளர் அந்தணன் காட்டமாக பேசியிருக்கிறார்.
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. இவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்யின் மனைவியாக த்ரிஷா நடித்திருந்தார். விஜய், த்ரிஷா தவிர்த்து அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மடோனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கும், த்ரிஷாவின் நடிப்புக்கும் டீசண்ட்டான வரவேற்பு கிடைத்தது.

மன்சூர் பேச்சு: இந்த சூழலில் சில வாரங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சு கடும் கண்டனத்தை எழுப்பியிருக்கிறது. த்ரிஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில், "மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு" என்று காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார். ஆனால் மன்சூர் அலிகானோ அலட்சியமாக விளக்கமளித்திருக்கிறார்.
த்ரிஷாவின் போராட்டம்: த்ரிஷாவைப் பொறுத்தவரை பல வருடங்களாக டாப் ஹீரோயினாக திகழ்ந்துவருகிறார். அதேசமயம் பல போராட்டங்களையும் அவர் சந்தித்திருக்கிறார். அந்தவகையில் அவர் சந்தித்ததில் மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று பல வருடங்களுக்கு முன்பு அவர் குளிப்பதாக பரவிய வீடியோதான். அதையும் அவர் தைரியமாக எதிர்கொண்டு கடந்து வந்துவிட்டார். தற்போது மன்சூர் அலிகான் பேசிய விஷயத்தையும் அவர் தைரியமாக எதிர்கொண்டிருக்கிறார்.
அந்தணன் காட்டம்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசியதற்கு விளக்கமளித்த மன்சூர் அலிகான் போய் பொழப்ப பாருங்க என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மன்சூர் அலிகான் அவரது பொழப்பை பார்த்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அவர் பேசியதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
த்ரிஷாவின் குளியல் வீடியோ: இந்த விஷயத்தில் தென்னிந்திய நடிகர் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. இதேபோல்தான் பல வருடங்களுக்கு முன்பு த்ரிஷா தங்கியிருந்த ஒரு நட்சத்திர விடுதியின் குளியல் அறையில் கேமரா வைத்து அவர் குளிக்கும் வீடியோவை வெளியிட்டார்கள். அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த விவகாரம் குறித்து காவல் துறையில் புகார் அளித்திருக்க வேண்டும்.
அப்படி அளித்திருந்தால் கேமராவை வைத்தது யார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். கண்டிப்பாக அந்த ஹோட்டலில் த்ரிஷா தங்கியிருந்தபோது அவர் பயன்படுத்திய அறையை வெகு சுலபமாக பயன்படுத்தக்கூடிய ஒருவரால்தான் கேமராவை வைத்திருக்க முடியும். அது ஹீரோவாகவோ, ஹோட்டல் ஊழியராகவோக்கூட இருந்திருக்கலாம்.
அந்த வீடியோ பொய் என்று த்ரிஷா தரப்பு சொன்னாலும் டேமேஜானது அவரது பெயர்தானே. அப்போதே நடிகர் சங்கம் களத்தில் இறங்கியிருந்தால் நடிகைகளுக்கு அதுபோன்று நடந்திருக்காது. இதோ இப்போது மன்சூர் அலிகானும் இப்படி பேசியிருக்கமாட்டார். கண்டிப்பாக அவரை நடிகர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











