வாடிவாசல் ட்ராப்புக்கு சூர்யா காரணமா?.. வெற்றிமாறன் காரணமா?.. பிரபலம் சொல்லும் விஷயம் இதுதான்

சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ, கங்குவா ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. அதிலும் கங்குவா நிலைமையெல்லாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. இப்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே இன்று கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களுள் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறது. சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அப்படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்துக்கு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு பதிலாக படுதோல்வியை சந்தித்தது.

படத்துக்கு ஓவர் ஹைப்?: குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, 'டிசம்பர் மாதம் நடக்கும் கங்குவா படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார். அதேபோல் இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்றும் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. அதுமட்டுமின்றி கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு பெரிய நஷ்டம் உண்டாகிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

Journalist Anthanan Talks about Vaadivaasal Movie And Suriya
Photo Credit:

கவிழ்த்த ரெட்ரோ: கங்குவா திரைப்படம் கொடுத்த மரண அடியிலிருந்து ரெட்ரோ படத்தை வைத்து மீண்டுவிடலாம் என்று சூர்யா கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதுவும் பலிக்கவில்லை. இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கார்த்திக் சுப்புராஜ் இப்போதைய தலைமுறையில் முக்கியமான இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவரே சூர்யாவுக்கு ஒரு மெகா ப்ளாக் பஸ்டரை கொடுக்க முடியவில்லையே என்று அவரது ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

அடுத்தடுத்த படங்கள்: ரெட்ரோவுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சமீபத்தில்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்தப் படத்துக்கு பிறகு லக்கி பாஸ்கர் பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்கிறார். அதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.

வாடிவாசல்: இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சில மாதங்களுக்கு முன்புகூட தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன், சூர்யா ஆகியோர் சந்தித்தனர். எனவே விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிடும் என்று ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் படம் ட்ராப்பாகிவிட்டதாக் சில நாட்களாக தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்தணன் பேட்டி: இந்நிலையில் வாடிவாசல் படம் குறித்து பேசியிருக்கும் பத்திரிகையாளர் அந்தணன், "ஒரு படத்துக்காக ஒரு மனிதன் எத்தனை வருடங்கள் வீட்டில் அமர்ந்திருப்பார். ஒரு படம் நடித்தால் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வாடிவாசல் படத்துக்காக காத்திருந்தார்.

அவரிடம் வந்து முறையான கதை சொல்லாமல் இருந்தால் எப்படி. அதுமட்டுமில்லாமல் இரண்டு வருடங்கள் மொத்தமாக டேட் கேட்டிருக்கிறார். அதற்கும் சூர்யா ஒத்துக்கொண்டு சரி நான் தருகிறேன்; ஆனால் ஒரே பார்ட்டாக எடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கு வெற்றிமாறனோ அதெல்லாம் எனக்கு தெரியாது. எடுக்க ஆரம்பிப்பேன். அது இரண்டு பாகங்களாக வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். இதனால்தான் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X