ஜேசன் சஞ்சய்யின் முதல் படம்.. விஜய் விலகியிருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?

சென்னை: விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படம் இயக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படத்தில் யார் ஹீரோவாக நடிப்பார் என்பது பலருக்கும் பெரிய கேள்வியாக இருந்தது. அதுமட்டுமின்றி அந்தப் படம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகமும் கோலிவுட்டில் எழுந்தது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆனது. படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களில் ஒருவரான விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் GOAT திரைப்படம் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான கோட், லியோ, வாரிசு ஆகிய மூன்று படங்களுமே பெரிய வெற்றியை பெறாததால் விஜய்யும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறார்கள்.

vijay jason sanjay anthanan

தளபதி 69: நிலைமை இப்படி இருக்க விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும்தான் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அந்தப் படத்தை அ.வினோத் இயக்க; பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். பாபி தியோல் வில்லன் ரோல் ஏற்றிருக்கிறார். விஜய்யின் கடைசி படம் என்பதால் தளபதி 69 படத்தை அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வினோத் இயக்கம் என்பதாலும் இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த கோலிவுட்டின் ஆர்வமும் அதிகரித்திருக்கிறது.

ஜேசன் சஞ்சய்: இதற்கிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் இயக்கம் சம்பந்தமான படிப்பை படித்தார். அவரது தந்தை போல சஞ்சய்யும் நடிகராக வருவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தனி ரூட் பிடித்த சஞ்சய்; இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார். லைகா நிறுவனம் அந்தப் படத்தை தயாரிக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் அந்தப் படத்தின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து எதுவும் தெரியாமல் இருந்தது.

சந்தீப் கிஷன் ஹீரோ: மேலும் சஞ்சய் இயக்கவிருக்கும் படம் ட்ராப்பாகிவிட்டது என்றெல்லாம் பல கதைகள் உலாவின. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் இயக்கும் படம் பற்றிய அப்டேட் வெளியானது. அதன்படி படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இதுதொடர்பான மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டானது. இது ஒருபக்கம் இருக்க தனது மகன் படம் பற்றி விஜய் இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார்.

அந்தணன் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ஜேசன் சஞ்சய்யின் படத்தின் விஷயம் என்பது விஜய்யின் Knowledge இல்லாமல் நடக்கும் விஷயம். தனது அப்பாவால் வாய்ப்பு வாங்கிவிட்டேன் என்ற பெயர் இருக்கக்கூடாது என்பதுதான் ஜேசனின் மன ஓட்டம். அதன் காரணமாகத்தான் விஜய் இந்த விஷயத்தில் எதிலுமே தலையிடவில்லை. அதனால்தான் இதுதொடர்பாக விஜய் ஒரு ட்வீட்டும் போடவில்லை. ஜேசனின் ஆஃபிஸ் பூஜைக்குக்கூட விஜய் போகவில்லை. அதேசமயம் எஸ்.ஏ.சி ஜேசனுடன் நன்றாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார். தாத்தா - பேரன் உறவு சூப்பராகத்தான் இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X