Tamizhaga Vetri Kazhagam - தமிழக வெற்றி கழகம்.. என்னங்க பெயர் இது.. வலைப்பேச்சு அந்தணன் விளாசல்

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை வேறு எந்த கட்சிக்கு ஆதரவும் இல்லை. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி போட்டியிடும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து பேசியிருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தனர். இத்தனை நாட்கள் அமைதி காத்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டிருப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். மேலும் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான வேலைகளும் தொடங்கியிருக்கின்றன. தங்களது ஆசையை தளபதி நிறைவேற்றிவிட்டார்; அவருக்காக கடுமையாக உழைப்போம் என்று கூறி விஜய்யின் ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Journalist Anthanan Talks about Vijay Tamil Vetri Kazhagam Political Party

சட்டப்பேரவைத் தேர்தல்தான்: அரசியல் கட்சியை ஆரம்பித்துவிட்டாலும் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடப்போகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார் விஜய். சட்டப்பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியையோ அல்லது கணிசமான வாக்குகளையோ பெற்ற தீர வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட விஜய், இன்னும் ஒரு படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார்.

பெயர் எப்படி இருக்கு: ஒருபக்கம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒருதரப்பினரோ கட்சியின் பெயரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். கழகங்களால் சூழப்பட்டதுதான் தமிழ்நாடு அரசியல் என்பதை உணர்ந்து கட்சியில் கழகம் என்ற வார்த்தையை சேர்த்தது ஸ்மார் மூவ்தான் என்றாலும், தமிழ்நாடு என்று பெயர் இருக்கும்போது எதற்காக தமிழகம் என்று சொல்ல வேண்டும் என காரசாரமான கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

அந்தணன்: இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "ஒரு அரசியல் கட்சிக்கு அதன் பெயர் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. விஜய்யும் தனது அரசியல் கட்சிக்கு பெயர் வைப்பதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான ஒரு குழுவை அமைத்திருந்தார். அவர்கள் மொத்தம் கட்சிக்காக 50 பெயர்களை எழுதிக்கொண்டுபோய் விஜய்யிடம் கொடுத்தார்கள்.

என்ன பெயர் இது: அந்த 50 பெயர்களில் விஜய் ஓகே சொன்ன பெயர்தான் இந்த தமிழக வெற்றி கழகம். அவர் ஓகே சொன்ன இந்தப் பெயரே இப்படி இருக்கிறது என்றால் அவர் ரிஜெக்ட் செய்த மீதம் 49 பெயர்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். பெயர் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்பதுதான் ஆழமான கருத்து. அதேபோல் மாற்றத்திற்கான ஒருவராக தன்னை முன்னிறுத்துகிறார் விஜய்.

பிராக்டிக்கல்: அவர் வெளியிட்ட அறிக்கையில் வழக்கமான அரசியல்வாதிகள் சொல்லும் டெம்ப்ளேட் விஷயங்கள்தான் இருந்தன. பிராக்டிக்கலான அரசியலை அவர் பேசுவார் என்று எதிர்பார்த்தால் அது இல்லை. அவர் கூறியிருந்த விஷயங்களை மதம் பற்றி பேசியிருந்ததை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சாதி குறித்து சொன்னது எல்லாம் வாய்ப்பே இல்லை. ஏனெனில் அரசியலில் சாதிதான் முக்கியமான ரோல் செய்துகொண்டிருக்கிறது" என்றார். அவரது இந்தப் பேச்சு இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X