Vijay - விஜய்யின் அரசியல் பிளான் இதுவா?.. மொத்தம் 170 திட்டங்கள்?.. தேர்தலில் இந்தியா கூட்டணிதானா?
சென்னை: Vijay in Politics (அரசியலில் விஜய்) விஜய்யின் அரசியல் பிளான் என்னவாக இருக்கிறது என்பது குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் டாப் 3ல் இருக்கும் ஹீரோ விஜய். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் இதுவரை 500 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ படத்தின் வெற்றி விழா நடக்கவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
தளபதி 68: லியோ படத்தில் நடித்து முடித்த விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டு ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி, பிரேம்ஜி அமரன், மைக் மோகன் என பலர் நடிக்கின்றனர்.
அரசியல் திட்டம்: இதற்கிடையே கடந்த சில வருடங்களாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் பேசிவருகின்றனர். அதற்கேற்றபடிதான் அவரது ஒவ்வொரு செயலும் இருக்கிறது. தனது மக்கள் இயக்கம் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் அவர் மாணவ, மாணவிகளை அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். அதனையடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை தொடங்கப்பட்டன. அதுமட்டுமின்றி விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கங்களும் ஏற்படப்போவதாக கூறப்படுகிறது.
அந்தணன் வீடியோ: அதேபோல் விஜய் தமிழ்நாட்டில் தனித்து இயங்கி திமுக அதிமுகவை எதிர்ப்பார் என்றும் ஒரு கருத்து ஓடுவதுண்டு. ஆனால் அப்படி இருக்கும்பட்சத்தில் ஒருவேளை பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பாரோ என்ற சந்தேகமும் எழுந்தது. இந்நிலையில் பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.
தொழிற்சங்கங்கள்: அவர் பேசிய வீடியோவில், "விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்படலாம். இதுபோன்று அவரிடம் மொத்தம் 170 திட்டங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றாக வரும்போது தமிழ்நாடே பிரமிப்பில் இருக்கும் என்கிறார்கள். பாஜகவுக்கு ஆதரவாகத்தான் விஜய் செயல்படுவார் என்ற நினைப்பு இருந்தது. ஆனால் விஜய்யை அவர்கள் தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தனர். குறிப்பாக ஜோசப் விஜய் என்றெல்லாம் பேசினார் ஹெச்.ராஜா. எனவே அவர் பாஜக பக்கம் போவதற்கான வாய்ப்பு இல்லை.
அதேசமயம் வெளியில் விசாரித்து பார்த்தால் அவர் தற்போது ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டில் இருக்கிறாராம். முக்கியமாக வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவர் இந்தியா கூட்டணிக்குத்தான் தன்னுடைய ஆதரவை கொடுப்பார் என்கிறார்கள். அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக - அதிமுகவை எதிர்க்கும் எண்ணத்தில் இருக்கும் விஜய் எப்படி இந்தியா கூட்டணியில் என்ற கேள்வியும் எழுகிறது.

ஆனால் அதிலும் விஜய் தெளிவாகத்தான் இருக்கிறார் என்கிறார்கள். அதாவது இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு கொடுக்கும் விஜய் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் நிற்கும் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்யவிருக்கிறார் என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. மேலும் ராகுல் காந்தியும், விஜய்யும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனவும் சொல்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











