அஜித் என்னை நம்பவில்லை.. அஜித்தும் அப்பாவும் பேசிக்க மாட்டாங்க.. பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்!
சென்னை : பிஆர்ஓ சுரேஷ் சந்திராவை நம்பிய அளவுக்கு, அஜித் என்னை நம்பியது இல்லை என, அஜித்தின் தந்தை கூறியதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் நேற்று அதிகாலை திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 85.
அவரின் இறுதிச்சடங்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அஜித்தின் அப்பாவுடன் நட்பு
இந்நிலையில், சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் அஜித் தந்தை உயிரிழந்தது குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்த போது,என் வீட்டிற்கு அடுத்த தெருவில்தான் அஜித்தின் வீடு. அப்போது அஜித்தின் தந்தை பாலக்காடு சுப்பிரமணிய ஐய்யரும், அவரது மனைவி மோகினியும் வாக்கிங் வருவார்கள். அப்போதுதான் எனக்கு அவருடன் நட்பு ஏற்பட்டது.

என்னை நம்பினார்
அப்போது பல அனுபவங்களை அவர் என்னுடன் பகிர்ந்துள்ளார். நாங்கள் பல விஷயங்களை பற்றி பேசினாலும், என்னை நம்பி பல விஷயங்களை அவர் என்னிடம் சொன்னார், அவை அத்தனையையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளமுடியாது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றார்.

அஜித் என்னை நம்பமாட்டார்
அப்போது அவர் சொன்ன விஷயம் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, அதாவது நான் சொல்வதை அஜித்குமார் கேட்கமாட்டார். ஆனால், அவரின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா சொன்னால் கேட்பார் என்றார். ஏன் என்றால் அஜித், சுரேஷ் சந்திராவை நம்புகிற அளவுக்கு, அப்பாவாக இருந்தாலும், அஜித் என்னை நம்பவில்லை. சினிமா தொடர்பாக கதை, கால்ஷீட் என எதைபற்றியும் அவர் என்னிடம் பேசியது இல்லை என்றார்.

அம்மா மீது தான் பாசம்
இதற்கு காரணம் என்னவென்றால், அஜித் தன்னுடைய முயற்சியால் மட்டுமே இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இதனால், அவர் என்னிடம் எதையும் கூறமாட்டார். இதை நானும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன். ஏன் என்றால் சினிமா பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றார். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை கப்பலில் அப்பா, அம்மாவை ஜாலி டூருக்கு அனுப்பி வைப்பார். என்னத்தான் அப்பா ஜாலியாக இருக்கட்டும் என்று நினைத்தாலும், அஜித்திற்கு அப்பாவை விட அம்மா மீது அதீத ஈடுபாடு,அன்பு, பாசம் எல்லாம்.

சாய் பாபா பக்தர்
அஜித் கடந்த சில வருடங்களாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். அதே போல பட ப்ரோமோஷனில் கலந்து கொள்வதிலும் விரும்பமாட்டார். ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு மனைவி ஷாலினி, அம்மா, அப்பாவுடன் வருவார். அஜித் தீவிர சாய்பாபா பக்தர் என்று பயில்வான் ரங்கநாதன் அஜித் குறித்து பல தகவல்களை கூறினார்.


Click it and Unblock the Notifications











