மகள் இறக்கும் தருவாயில் அதை செய்தார் இளையராஜா.. பணத்தாசை பிடித்தவர்.. சர்ச்சையை கிளப்பிய பயில்வான்

சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. அவரது உடலானது பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் இளையராஜா பற்றி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் கொண்ட அவர் ராசய்யா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல் பாடலாக, 'காதல் வானிலே காதல் வானிலே' பாடலை பாடிய அவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தனித்துவமான குரல் வளம் கொண்ட அவர் ஒவ்வொரு பாடலிலும் தனது திறமையை நிரூபித்துவந்தவர். இளையராஜா இசையில் அதிகம் பாடியிருந்தாலும் ஹாரிஸ் ஜெயராஜ், தேவா, சிற்பி போன்ற இசையமைப்பாளர்களுக்கும் பாடியிருக்கிறார்.

Journalist Bayilvan Ranganathan Controversial Talks about Bhavatharini Death

தேசிய விருது: பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடல் பாடியதற்காக கடந்த 2001ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் வென்றார் பவதாரிணி. அதேபோல் அவர் பாடிய பாடல்களில் அழகி படத்தில் இடம்பெற்ற 'ஒளியிலே தெரிவது தேவதையா' பாடலும் முக்கியத்துவம் வாய்ந்தது. இளையராஜாவின் இசைக்கு பவதாரிணி தனது குரலால் அற்புதம் செய்திருப்பார் அந்தப் பாடலில்.

கேன்சர்: கடைசியாக அனேகன் அடத்தில் 'ஆத்தாடி ஆத்தாடி' பாடலை பாடிய அவர் இதுவரை பத்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். இந்த சூழலில் அவருக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அதனையொட்டி அவர் சென்னையிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இங்கு சரியாகாததால் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க முடிவு செய்து அங்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அவர் உயிரிழந்தார். அவரது உடல் பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பவதாரிணி தனது இரு சகோதரர்களுக்கும் ஒரு பாலமாகவே இருந்தார். அதுவும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரொம்பவே நெருக்கமானவராக இருந்தார். நான்காவது கட்டத்தில்தான் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதுவும் இலங்கைக்கு சென்ற பிறகுதான் தெரியவந்திருக்கிறது.

பணத்தாசை பிடித்தவர்: பவதாரிணி தனது கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்தபோதும் இளையராஜா இலங்கையில் கச்சேரி வைத்திருக்கக்கூடாது. தனது மகள் இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது இசை கச்சேரி அவசியம்தானா என்று அவர் யோசித்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி நினைக்கவில்லை. இதிலிருந்தே இளையராஜா எவ்வளவு பணத்தாசை பிடித்தவர் என்று தெரிந்துவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X