Radha - சிரஞ்சீவியுடன் மட்டும்தான் நடிப்பாரா?.. ராதாவுக்காக மல்லுக்கட்டிய பாலகிருஷ்ணா

சென்னை: Radha (ராதா) நடிகை ராதாவுக்காக நடிகர் பாலகிருஷ்ணா மல்லுக்கட்டியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராதா. அம்பிகாவின் தங்கையான ராதா முதல் படத்திலேயே அழகாலும் நடிப்பாலும் தன்னை நிரூபித்தார். அதன் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் 80களில் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். சொல்லப்போனால் அம்பிகா - ராதா இரண்டு பேரும் தமிழ் சினிமாவை ரூல் செய்தார்கள் என்பதுதான் உண்மை.

Journalist Bayilvan Ranganathan Talks about Actress Radha And Balakrishna

தெலுங்கிலும் டாப்: தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் அறிமுகமான ராதா அங்கும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டார். அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்தவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்த சூழலில் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கார்த்திகா, துளசி என்ற மகள்கள் இருக்கிறார்கள்.

மகள்களும் சினிமாவில்: கார்த்திகா கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தன. இதனால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதேபோல் ராதாவின் இளைய மகளான துளசி மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

Journalist Bayilvan Ranganathan Talks about Actress Radha And Balakrishna

ராதா மகள் திருமணம்: சூழல் இப்படி இருக்க கார்த்திகாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. படு பிரமாண்டமாக நடந்த அந்தத் திருமணம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. நகை மட்டுமே 500 பவுன் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ராதாவுக்காக தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மல்லுக்கட்டியதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

பயில்வான் வீடியோ: இதுகுறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ஒன்றில், "அம்பிகாதான் ராதாவை தெலுங்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தி வாய்ப்புகள் வாங்கிக்கொடுத்தார். அங்கு நடிக்க ஆரம்பித்த ஒருகட்டத்தில் அம்பிகாவையே ஓவர் டேக் செய்துவிட்டார். அதை பார்த்து அம்பிகா சந்தோஷம்தான் அடைந்தார்.

Journalist Bayilvan Ranganathan Talks about Actress Radha And Balakrishna

மல்லுக்கட்டிய பாலகிருஷ்ணா: தெலுங்கில் சிரஞ்சீவியுடன் தொடர்ந்து நடித்துவந்தார் ராதா. இதை கவனித்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணா ஏன் சிரஞ்சீவியுடன் மட்டும்தான் ராதா நடிப்பாரா என கேட்டுவிட்டு அவருக்காக மல்லுக்கட்ட ஆரம்பித்தார். தொடர்ந்து மல்லுக்கட்டி ஒருவழியாக தனக்கு ஜோடியாக ராதாவை நடிக்க வைத்தார். இருந்தாலும் அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

பாலகிருஷ்ணாவுடன் ராதா நடித்தாலும் அவரை சிரஞ்சீவி தனது கைகளுக்குள்ளேயே வைத்திருந்தார். அதனால்தான் ராதாவின் மகள் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்னரே வந்து விழுந்து விழுந்து வேலை செய்தார் சிரஞ்சீவி" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X