Trisha - அந்தப் படத்தில் த்ரிஷா மீதிருந்த போர்வை நீக்கப்பட்டது.. பயில்வான் ரங்கநாதன் ஓபன் டாக்

சென்னை: Trisha (த்ரிஷா) நடிகை த்ரிஷா ஆரம்பகால வாழ்க்கை குறித்து பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலை காட்டிய த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்திலிருந்து சமீபத்தில் வெளியான லியோ படம்வரை என மொத்தம் 22 வருடங்கள் ஃபீல்டில் இருக்கிறார். ஒரு நடிகை சில வருடங்கள் தாக்குப்பிடிப்பதே அதிசயம் என்ற சூழலில் 22 வருடங்கள் ஹீரோயினாக இருப்பது பெரும் ஆச்சரியமே.

Journalist Bayilvan Ranganathan Talks about Actress Trishas Initial Stage

பெரும் போராட்டம்: த்ரிஷாவை பொறுத்தவரை தன்னுடைய கரியரில் பல போராட்டங்களை சந்தித்தவர். அவர் பீக்கில் இருந்தபோது அவர் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் அதையெல்லாம் கண்டு அசராத அவர் தனது திறமையால் இன்னமும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

மன்சூர் அலிகான்: சமீபத்தில்கூட லியோ படத்தில் நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அந்த விவகாரம் கடந்த சில நாட்களாகவே ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கும் த்ரிஷா தன்னுடைய காட்டமான பதிலடியை நேரடியாகவே சொன்னார். அதுமட்டுமின்றி அவருக்கு பக்கபலமாக ஒட்டுமொத்த திரையுலகமும் திரள ஆரம்பித்திருக்கிறது.

அடுத்தடுத்த படங்கள்: இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த த்ரிஷாவுக்கு 96 படம் கம்பேக்காக அமைந்தது. அந்தப் படத்துக்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து லியோ படத்தில் நடித்திருந்த அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, கமல் ஹாசனின் தக் லைஃப் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்நிலையில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் த்ரிஷாவின் ஆரம்பகாலம் குறித்து பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசிய அவர், "ஒரு நடிகைக்கு மார்க்கெட் வேண்டுமென்றால் படம் ஓட வேண்டும். அப்போதுதான் சம்பளம் எல்லாம் உயரும். த்ரிஷா துணை நடிகையாக இருந்துதான் சினிமாவுக்குள் வந்தவர்.

போர்வை நீக்கப்பட்டது: அதற்கு பிறகு மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சரியாக ஓடவில்லை. அதனையடுத்து மனசெல்லாம் படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஓடவில்லை. தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்தன. அப்படிப்பட்ட சூழலில்தான் சாமி படத்தை ஆரம்பித்து த்ரிஷாவை ஹீரோயினாக ஃபிக்ஸ் செய்தார் ஹரி. ஆனால் சிலர் ஹரியிடம் வந்து, ஏன் ஹரி ஏற்கனவே அந்த பெண்ணுக்கு இரண்டு படங்கள் ஓடவில்லை. ராசியில்லாத நடிகை. அவங்களை ஹீரோயினா போடுறீங்களே என கேட்டனர்.

அதற்கு ஹரியோ இல்லை கண்டிப்பாக இந்த கேரக்டருக்கு த்ரிஷாதான் செட் ஆவார் என்று சொன்னார். படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்து வசூலை வாரி குவித்தது. அதற்கு அடுத்து த்ரிஷாவுக்கும் பட வாய்ப்புகள் அவ்வளவு வந்தன. அந்தப் படத்தில்தான் த்ரிஷா மீது இருந்த ராசியில்லாத நடிகை என்ற போர்வை நீக்கப்பட்டது. சாமி படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே ஒரு ப்ரஸ் மீட்டில் பேசிய த்ரிஷா, சாமி படம் ஓடவில்லை என்றால் நான் சினிமாவிலிருந்து விலகிவிடுகிறேன் என்று கூறியிருந்தார். ஆக சாமி இல்லையென்றால் த்ரிஷா இல்லை என்பதுதான் உண்மை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X