Bad Girl ஆபாசத்தின் உச்சம்.. கொந்தளிக்கும் பிரமாண பெண்கள்.. வெற்றிமாறன் இப்படி செய்யலாமா?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேட் கேர்ள். அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி இருக்கிறார்.

bad girl bayilvan ranganathan vetrimaaran

அதில், சீமா நடித்திருந்த அவளோட ராவுகள், செல்வராகன் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படம் இந்த இரண்டு திரைப்படங்களும் கொஞ்சம் விவகாரமான படம் தான். இந்த படத்தை எல்லாம் மீறுவதற்கு ஒரு படம் வரப்போகிறது அதுதான் தான் பேட் கேர்ள். இந்த படத்தை நாம் எவ்வளவு தான் விமர்சித்தாலும், இந்த திரைப்படம் வசூலில் சாதனை படைக்கப் போகிறது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட ப்மோஷன் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் பேசுவது கூட இந்த படத்திற்கு ஒரு பிரமோஷன் ஆக அமையலாம்.

bad girl bayilvan ranganathan vetrimaaran

பேட் கேர்ள்: படத்தில் டிரைலரிலேயே படத்தின் கதையை சொல்லிவிட்டார் இயக்குநர், அந்த படத்தின் நாயகி ஒரு பிராமண பெண்ணாக இருக்கிறார். அவளுக்கு விருப்பம் போல வாழ வேண்டும் என்று ஆசை, ஆனால் பிராமண பெற்றோர்களும், அவளின் உறவினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், அந்த பிராமணப் பெண், என் இஷ்டத்திற்கு வாழ வேண்டும், என் விருப்பத்தின்படி வாழ வேண்டும், ஆண் நண்பரை வைத்துக்கொள்வதை ஒரு கௌரவமாக கருதுகிறாள். அதுமட்டுமில்லாமல், அந்த ஆண் நண்பருடன் உடலுறவு வைத்துக்கொள்வது, டேட்டிங் செல்வது என அனைத்தும் நடக்கிறது. இதை அந்த பெண்ணின் தோழிகள் கண்டித்த போதும், அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், தனது இஷ்டத்திற்குத்தான் நடந்து கொள்வேன் என்கிறார்.

bad girl bayilvan ranganathan vetrimaaran

இது நியாயமா: எப்படி ஒரு மோசமான திரைப்படத்தில், அந்த பெண் ஒரு பிராமண பெண்ணாக ஏன் காட்டி இருக்கிறார். பட்டியலின மக்களை மட்டும் சினிமாவில் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று கூக்குரலிடும் ப ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர், தங்களுடைய படத்தில் ஒரு பிராமணப் பெண்னை இப்படி ஒரு மோசமான கட்டி இருப்பது தவறு இல்லை. உங்களுக்கு ஒரு நியாயம், பிராமணப் பெண்ணுக்கு ஒரு நியாயமா. சினிமாவிற்கு இதுதெல்லாம் தேவையா? தேவையில்லாமல் பிராமணப் பெண்களை விமர்சித்தது ஏன். உண்மையில் பிராமணர்கள் பாவம் தான், இதை எதிர்த்து யாரும் போராட்டம் செய்ய மாட்டார்கள். இந்த ஒரு படம் வந்தா, பிராமணர்களின் மரியாதையை கெடுத்துவிடாது என்று பொய்விடுவார்கள்.

bad girl bayilvan ranganathan vetrimaaran

படத்திற்கு நிச்சயம் சிக்கல் வரும்: ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ், பள்ளி சிறார்களை தவறாக சித்தரிக்கும் படத்தை போக்சோ படத்தை கண்டிக்கும் உரிமை உண்டு. நிச்சயமாக பேட் கேர்ள் படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இந்த படத்திற்கு நிச்சயம் சிக்கல் வரும். ஆனால், இவ்வளவு ஆபாசம் இருக்கும் போது, சென்சார் போர்டு அனுமதித்தது என்று தெரியவில்லை, ஒரு வேலை சென்சார் போர்டும் இந்த ஆபாசத்தைத் தான் விரும்புகிறதா என்பது தெரியவில்லை என பயில்வான் ரங்கநாதன் அந்த போட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X