சேர்ந்து வாழ பங்களா.. ஆனால் ஜோதிகா மும்பை போய்ட்டாராம்.. அவர் செம அப்செட்?.. பிரபலம் கிளப்பிய பகீர்

சென்னை: சூர்யாவும், ஜோதிகாவும் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடி. இருவரும் நல்ல ஒற்றுமை, புரிந்தலுடன் தங்களது வாழ்க்கையை காதலுடனும், அமைதியுடனும் நகர்த்தி வருகிறார்கள். இப்போது இரண்டு பேருமே மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள். அதற்கு காரணமாக சூர்யாவும், ஜோதிகாவும் பாலிவுட்டில் கவனத்தை திருப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் அவர்கள் குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் பகீர் கிளப்புவதாக இருக்கிரது.

பத்திரிகையாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பல வருடங்களாக சினிமாவிலும், சினிமா பத்திரிகையாளராகவும் இருந்துவருகிறார் அவர். அதன் காரணமாக நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்று கூறிக்கொண்டு வீடியோவிலும், பேட்டியிலும் தொடர்ந்து பேசிவருகிறார். அவை பல நேரங்களில் கடும் கண்டனத்தை பெற்றிருந்தாலும்; அதை பற்றியெல்லாம் அவர் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை.

Journalist Bayilvan Ranganathan Talks about Suriya And Jyothika

சூர்யா - ஜோதிகா: இந்தச் சூழலில் கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியான சூர்யா - ஜோதிகா குறித்து கடந்த சில காலமாக பேச ஆரம்பித்திருக்கிறார் பயில்வான். அந்தவகையில் சமீபத்தில் அவர்கள் குறித்து பேசிய பயில்வான், "சிவக்குமார் திரைத்துறையில் இருந்தவர்தான் என்றாலும் இவர் சாமானிய பெண்ணையே திருமணம் செய்துகொண்டார். ஆனால் சூர்யாவோ நடிகை ஜோதிகாவை காதலித்தார். திருமணம் செய்து வைக்கும்படி சிவக்குமாரிடமும் சொன்னார்.

என்னது வேறு சாதியா?: அதற்கு சிவக்குமாரோ, தங்கை ஒருவர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது நீ வேறு சாதி பெண்ணை திருமணம் செய்துகொண்டால் தங்கையின் திருமணத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி ஒத்துக்கொள்ள மறுத்தார். ஆனால் சூர்யாவோ பொறுமையாக இருந்து பல படங்களில் நடித்து சம்பாதித்து தங்கையை திருமணம் செய்துகொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னுடைய கடமையை முடித்துவிட்டேன் இப்போது என் காதலுக்கு ஒப்புதல் தாருங்கள் என்று கேட்டார்.

வேறு வழியே இல்லை: அதனைத் தொடர்ந்து வேறு வழியே இல்லாமல் சூர்யாவின் காதலுக்கு சிவக்குமார் ஒத்துக்கொண்டார். பிறகு சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். சூழல் இப்படி இருக்க ஜோதிகா மீண்டும் நடிக்க வேண்டும் கூற; அதற்கு சிவக்குமார் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு 36 வயதினிலே கதையை கேட்ட பிறகு ஒரு படம்தானே என்று ஒத்துக்கொண்டார் சிவக்குமார். ஆனால் ஜோதிகாவோ தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டானார். அதுவும் சிவக்குமாருக்கு பிடிக்கவில்லை.

மும்பை கிளம்பிய ஜோதிகா: சிவக்குமார், சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் சென்னையில் பிரமாண்ட பங்களா ஒன்று கட்டப்பட்டது. சேர்ந்து வாழ்வதற்காக கட்டப்பட்டது. கிரஹப்பிரவேசம் முடிந்த மறு மாதமே ஜோதிகா மும்பைக்கு கிளம்பி சென்றுவிட்டார். அண்மையில்கூட சூர்யாவின் மகன் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கினார். அதில், சிவக்குமார், சூர்யா கலந்துகொண்டனர். ஜோதிகா கலந்துகொள்ளவில்லை.

தனுஷ் - ஐஸ்வர்யா போல் இல்லை: தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே என்னவிதமான கருத்து மோதல்கள் இருந்தாலும்கூட அவர்களது மகன்கள் என்றவுடன் ஒன்றாக வந்து நின்றார்கள். ஆனால் ஜோதிகா நிற்கவில்லை. சூர்யாவுக்கு மும்பையில் ஜோதிகா பங்களா ஒன்றை கட்டிக்கொடுத்திருக்கிறார். ஹிந்தி படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். கூடவே சூர்யாவையும் ஹிந்தியில் ஹீரோவாக மாற்ற முயற்சிகள் எடுத்துக்கொண்டிருக்கிறார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X