ஜோதிகாவும், சூர்யாவும் தனித்தனியா இருக்காங்களாம்.. பயில்வான் என்னென்ன சொல்றாரு பாருங்க
சென்னை: கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக வலம் வருபவர்கள்தான் சூர்யாவும், ஜோதிகாவும். இருவரும் காதலித்து வீட்டார்களின் சம்மதத்துக்காக பல வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்துகொண்டார். இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா இப்போது மீண்டும் நடித்துவருகிறார். கடைசியாக அவர் ஷைத்தான் படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் சூர்யா - ஜோதிகா பற்றி பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி பல சர்ச்சைகளுக்கு தொடக்கப்புள்ளியாகவும் இருப்பார்.

அவதூறு பரப்பும் பயில்வான்: தான் சொல்வதுதான் உண்மை. தனக்கு சினிமாவில் இருப்பவர்கள் பற்றி எல்லாமே தெரியும் என்ற மனப்பான்மையில் இருப்பவர் நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் உள்ளிட்ட நடிகைகள் குறித்தும் தனுஷ், கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்ட நடிகர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசியிருக்கிறார். ஆனால் அவை அனைத்துமே அவதூறுகள்தான் என்பது ரசிகர்களின் கருத்து. மேலும் அவர் அப்படி பேசுவதை பிரபலங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
சண்டை செய்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்தது குறித்து பயில்வான் ரங்கநாதன் தான்தோன்றித்தனமாக பேசிவைக்க; திருவான்மியூர் கடற்கரையில் அவர் வாக்கிங் சென்றுகொண்டிருந்தபோது ரேகா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ரேகா நாயர். அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் இறந்தால் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன் எனவும் பகிரங்கமாக பேட்டியும் அளித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ராதிகா குறித்து அவதூறாக பேசியதால் பயில்வானை ராதிகா செருப்பால் அடித்தார் என்றும் ஒரு தகவல் உலாவுகிறது.
கே.ராஜனின் பதிலடி: வீடியோக்களில் மட்டுமின்றி சினிமா நிகழ்ச்சியிலும் சர்ச்சை கேள்விகளை கிளப்பும் பயில்வான் ஒருமுறை தயாரிப்பாளர் ராஜனிடம் வாயை கொடுத்தார். அதற்கு கே.ராஜன் கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தார். ராஜன் அப்படி பேசியதற்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். பயில்வான் போன்ற ஆட்களுக்கு ராஜன் வகையறாதான் சரியான ஆட்கள் என ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர். சமீபத்தில்கூட ரத்னம் பட ப்ரஸ் மீட்டில் விஷாலும் பயில்வானுக்கு சரியான பதிலடியை கொடுத்திருந்தார்.
பகீர் கிளப்பிய பயில்வான்: இந்நிலையில் சூர்யா - ஜோதிகா குறித்து பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதன், "நடந்து முடிந்து மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து விஜய் வந்தார். ரஷ்யாவிலிருந்து துபாய் வந்து அங்கிருந்து சென்னைக்கு வந்தார். ஏனென்றால் வாக்களிப்பது என்பது ஒரு ஜனநாயக கடமை. பெரும்பாலான நடிகர்களும், நடிகைகளும் வாக்களித்தார்கள்.
ஜோதிகா செய்யவில்லை: ஆனால் ஜோதிகாவோ அதைக்கூட செய்யவில்லை. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் பேச்சை எடுக்கும்போது சிவகுமாரின் மனநிலைமை என்னவாக இருக்கும். மகன் மட்டும் வந்து வாக்களித்திருக்கிறார். ஆனால் மருமகள் வரவில்லை. இந்த விஷயத்தில் ஜோதிகாவின் நடத்தை சரியில்லை. மாமியார், மாமனாருக்கு அடங்கி இருக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒன்றாக இருக்க வேண்டும். அதை எல்லாம் ஜோதிகா மறந்துவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











