விஜய்யை சுற்றிவருகிறார் திரிஷா.. மரியாதையை காப்பாத்திகணும்.. என்ன பிரபலம் இப்படி பேசிட்டாரு?

சென்னை: விஜய்யும் திரிஷாவும் கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு தனி விமானத்தில் ஒன்றாக சென்றனர். ஏற்கனவே அவர்கள் இரண்டு பேரையும் இணைத்து கிசுகிசுக்கள் வெளியான சூழலில் அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக கோவாவுக்கு சென்றது விவாத பொருளாக மாறியது. விஜய்யிடமிருந்து தள்ளியிருங்கள் என்று ரசிகை ஒருவரும் திரிஷாவிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்தச் சூழலில் பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிடாவிட்டாலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களமிறங்குகிறது. அரசியலில் எப்படியாவது தனது தாக்கத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் அவர். அதன் காரணமாக சினிமாவிலிருந்து ஒதுங்கவிருக்கும் அவர்; ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது.

vijay trisha bayilvan ranganathan

அரசியல் மேடைகள்: கட்சியை ஆரம்பித்த பிறகு விஜய்யின் பேச்சுக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் முதல் மாநில மாநாட்டில் திமுகவையும் பாஜகவையும் கடுமையாக எதிர்த்தார். அடுத்ததாக, எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக மிகக்கடுமையாக விமர்சனம் செய்தார். இதன் காரணமாக அவரது கட்சி தொண்டர்களுக்கும், திமுகவினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் போக்கு நிலவிவருகிறது.

விமர்சனங்கள்: மேலும் விஜய்யின் நடவடிக்கைகளையும் அவருக்கு எதிர் நிலையில் இருப்பவர்கள் விமர்சிக்கவும் செய்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை தனது பனையூர் அலுவலகத்துக்கு வரவழைத்து நிவாரண உதவிகளை வழங்கினார். அது பெரும் கிண்டலுகுள்ளானது. முக்கியமாக, அரசியலில் Work From Home செய்யும் ஒரே கட்சி தலைவர் விஜய் மட்டும்தான் என்று ட்ரோல்களும் அவ்வளவு செய்யப்பட்டன.

திரிஷாவுடன் பயணம்: சூழல் இப்படி இருக்க நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கோவாவில் தனது காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். அதில் கலந்துகொள்வதற்காக தனி விமானத்தில் திரிஷாவுடன் அவர் சென்றார். அதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டாகின. அதனைப் பார்த்த பலரும் ஏற்கனவே விஜய்யையும் திரிஷாவையும் இணைத்து கிசுகிசு வந்துகொண்டிருக்கும் சூழலில் இவர் ஏன் திரிஷாவுடன் பயணம் செய்ய வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார்கள்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: மேலும் ரசிகை ஒருவரோ, நீங்களும் பெண்தானே. நீங்கள் அவருடன் இருக்கும் ஃபோடோவை போடுகிறீர்கள். இங்கு வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவரிடமிருந்து நீங்கள் தள்ளியே இருங்கள் என்று திரிஷாவிடம் சமூக வலைதளத்தில் கோரிக்கையும் வைத்தார். சூழல் இப்படி இருக்க விஜய் - திரிஷா குறித்து பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், ''சூடு கண்ட பூனை என்று சொல்வார்கள்.

பூனை மாதிரி சுற்றுகிறார்: அந்தப் பூனைக்கு பால் வைத்தால் குடித்துவிடும். ஆனால் சூடான பாலை வைக்கும்போது குடிக்க முடியாது என்பதால் அந்தப் பூனை பாலையே சுற்றிவரும். அப்படித்தான் திரிஷா இப்போது விஜய்யை சுற்றிவருகிறாரோ என்று தோன்றுகிறது. நிச்சயமாக விஜய்யை திரிஷா திருமணம் செய்துகொள்வதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில் விஜய்க்கு மகனும், மகளும் இருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் தொடங்கியிருக்கிறார். எனவே இந்த மாதிரியான நேரத்தில் தனது மரியாதையை காப்பாற்றிக்க வேண்டும் என்பதற்காக அவர் அதனை செய்யமாட்டார்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X