Vijay - விஜய்க்காக அதை செய்த எஸ்.ஏ.சி இதை ஏன் செய்யவில்லை?.. பத்திரிகையாளர் சரமாரி கேள்வி
சென்னை: Vijay (விஜய்) விஜய்க்காக எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காரியத்தை செய்யவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.
இந்திய சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் விஜய். தந்தையின் துணையோடு அறிமுகமானவர் என்று ஆரம்பத்தில் அடையாளம் இருந்தாலும் காலம் செல்ல செல்ல தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இதன் காரணமாக அவருக்கென்று ரசிகர்கள் எக்கச்சக்கமாக சேர்ந்தனர்.

வசூல் மன்னன்: விஜய்யின் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே நூறு கோடி ரூபாய் வசூலை செய்துவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவரை அவரது ரசிகர்கள் ரஜினிக்கு போட்டியாக நிறுத்துகின்றனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ தங்கள் தலைவருக்கு விஜய் மட்டுமில்லை யாருமே போட்டி இல்லை என்று பதிலடி கொடுத்துவருகின்றனர்.
தளபதி 68: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தன்னுடைய 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே இந்தப் படத்தின் மீது விஜய் ரசிகர்கள் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது விஜய் அதை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.
தந்தை துணை: இப்படி விஜய் தற்போது பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவரது ஆரம்பகாலத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் ரொம்பவே துணையாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததுதான். முக்கியமாக விஜய் அறிமுகமானபோது உருவ கேலி செய்யப்பட்டதற்கு எதிராக கொந்தளித்து எழுந்தது; இயக்குநர்களிடம் விஜய்க்காக கதை கேட்பது என நிழலாகவே வலம் வந்தார். ஆனால் இருவருக்கும் கடந்த சில வருடங்களாகவே மனஸ்தாபம் ஓடுவதாக கூறப்படுகிறது.
பிஸ்மி பேச்சு: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "பத்திரிகையாளர்கள் நடிகர்கள் குறித்து நல்லது எழுதினால் நன்றி சொல்லமாட்டார்கள். ஆனால் விமர்சனம் எழுதினால் ஏன் எழுதினீர்கள் என்று கேட்பார்கள். அப்படித்தான் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும்.
அதாவது விஜய் நடிக்க வந்த புதிதில் அவரை ஒரு பத்திரிகை வரம்பு மீறி விமர்சித்துவிட்டது. உடனடியாக எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிய படையை திரட்டிக்கொண்டு அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்று கலாட்டா செய்து மன்னிப்பு கேட்க வைத்தார். ஆனால் அந்த சமயத்தில் பல பத்திரிகைகள் விஜய்யை தலையில் தூக்கி வைத்து எழுதின. ஆனால் சந்திரசேகரோ அந்தப் பத்திரிகைகளுக்கு ஒரு நன்றிகூட தெரிவிக்கவில்லை. விஜய்க்காக அதை செய்த எஸ்.ஏ.சி இதையும் செய்திருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











