என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு அரைவேக்காடா?.. பிரபலம் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு
சென்னை: தமிழில் ஃபேமஸான திரை விமர்சகராக வலம் வருபவர் ப்ளூ சட்டை மாறன். யாருடைய படமாக இருந்தாலும் கிழித்து தொங்கவிடும் அவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர்; பலர் விமர்சிக்கவும் செய்கின்றனர். இருந்தாலும் தனது மனதுக்கு பட்டதை திரை விமர்சனமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி ஆன்டி இந்தியன் என்ற படத்தையும் அவர் இயக்கினார். சமீபத்தில்கூட விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார் ப்ளூ சட்டை மாறன்.
உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூட்யூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூட்யூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.
தனிநபர் தாக்குதல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
ரோமியோ சர்ச்சை: சமீபத்தில்கூட விஜய் ஆண்டனி நடித்திருந்த ரோமியோ படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அதற்கு விஜய் ஆண்டனி பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் ப்ளூ சட்டையோ அடுத்தடுத்த நாட்களில் விஜய் ஆண்டனியை தொடர்ந்து ட்ரோல் செய்துவருகிறார். அவரது இந்த செயலுக்கு ஒருதரப்பு ஆதரவு தெரிவிக்க; இன்னொரு தரப்பு கண்டனம் தெரிவித்துவருகிறது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி; ப்ளூ சட்டை மாறன் குறித்து பேசியிருக்கிறார்.
பிஸ்மி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "ப்ளூ சட்டை மாறன் நேர்மையான விமர்சகர். அவரை பணம் கொடுத்து வாங்க முடியாது. நட்பு பாராட்டினாலும் வாங்க முடியாது. அவர்தான் சரியான முறையில் படங்களை விமர்சனம் செய்கிறார். விஜய் ஆண்டனி மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தால்தான் ரோமியோ தோல்வியடைந்தது என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. அது உண்மை என்றால் அந்தப் படம் பலவீனமான ஒன்றாகவே கருதப்படுகிறது.
தரமற்ற படங்கள்: அவ்வாறு இல்லாமல் தமிழ் சினிமாவில் தரமற்ற படங்களை கொடுத்து அந்தப் படம் வெற்றி அடையாத சூழலில் விமர்சகர்கள் மீது பழியை போட்டுவிடுகிறார்கள் சினிமா துறையினர். ப்ளூ சட்டை மாறன் சொல்லும் விமர்சனங்கள் நேர்மையாகவே இருக்கின்றன. அவர் பொய்யான விமர்சனத்தை முன் வைப்பதில்லை. அவரை பின்பற்றும் ரசிகர்களுக்கு அவர் அறிவு ஜீவி, அவரை பிடிக்காதவர்களுக்கு அவர் அரைவேக்காடு" என்றார்.


Click it and Unblock the Notifications











