சந்தானத்துக்கு இருக்கும் விஸ்வாசம் சிவகார்த்திகேயனுக்கு இல்லை.. தனுஷுக்கு போட்டி.. பிரபலம் ஓபன் டாக்
சென்னை: சிவகார்த்திகேயனுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது நடனம், நடிப்பு மூலம் பலரையும் கவர்ந்திருக்கும் அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார்.. கமல் ஹாசன் தயாரித்துவருகிறார். படத்துக்கு அமரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. இதுதவிர ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் எஸ்கே ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சின்னத்திரையில் தோன்றி தற்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்து அதில் சென்றுகொண்டிருக்கும் அவருக்கு சிறுவர்கள்,சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் தொடர்ச்சியாக நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனுக்கான வியாபாரம் பெருகியது.

அடிவாங்கிய பிரின்ஸ்: வரிசையாக இரண்டு படங்கள் 100 கோடி வசூலில் இணைந்ததால் அனூதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் படம் பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்தது. மேலும் அப்படம் பைலிங்குவலாக உருவானதால் தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வரலாம் என கணக்கு போட்டிருந்தார் சிவா. ஆனால் அவரது கணக்கை தவிடுபொடியாக்கியது பிரின்ஸ் ரிசல்ட். படத்தை ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டார்கள்.
மாவீரன் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் கொடுத்த அடிக்கு மருந்தாக மாவீரன் இருக்கும் என நம்பியிருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கேற்றபடி மாவீரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் சிவகார்த்திகேயனின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக மாவீரன் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய அவர், இந்த முறை மிஸ் ஆகாது என்று பேசியிருந்தார். அதேபோல் படமும் ஹிட்டானது.
கமல், சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ரிலீஸான அயலானும் ஹிட்டடித்தது. இப்போது கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்துவருகிறது. அடுத்ததாக அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் அவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
மிஸ்டர் க்ளீன்: சிவகார்த்திகேயனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று சொல்வது உண்டு. அதனாலேயே கோலிவுட்டில் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்திருப்பவர். இருந்தாலும் இசையமைப்பாளர் இமான் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் க்ளீன் இமேஜை கொஞ்சம் அசைத்து பார்த்தது. ஆனால் சிவாவின் ரசிகர்களோ, இதெல்லாம் திட்டமிட்டு அவதூறு பரப்புவது என்றனர்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசுகையில், "3 படத்தில் முதல் சந்தானத்தைதான் புக் செய்திருந்தனர். சில நாட்கள் அவர் அதில் நடிக்கவும் செய்தார். ஆனால் சிம்பு சந்தானத்தை அழைத்து அதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லியதால் சந்தானம் விலகிவிட்டார். ஏனெனில் சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து வந்தது சிம்புதான். இன்றுவரை சிம்புவுக்கு விஸ்வாசமாக சந்தானம் நடந்துகொள்கிறார்.
சிவகார்த்திகேயன்: சிம்புவுக்கு இருப்பதுபோல் நமக்கும் ஒரு ஆள் வேண்டும் என்றுதான் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அழைத்து வந்தார் தனுஷ். இவரும் வளர்ந்தார். ஆனால் இப்போது தனுஷுக்கு போட்டியாக அவருடைய ஆஃபிஸுக்கு எதிரிலேயே சிவகார்த்திகேயன் ஒரு ஆஃபிஸை போட்டிருந்தார். தன்னுடைய தம்பி போல் சிவகார்த்திகேயனை நினைத்தார் தனுஷ். ஆனால் அவரோ தனுஷிடம் சினிமாவை கற்றுக்கொண்டு அவரிடமே கம்பி நீட்டிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











