Trisha - அந்த நடிகையை பற்றி மன்சூர் அலிகான் பேசுனப்போ அமைதி.. இப்போ ஏன் பொங்குறீங்க த்ரிஷா.. பிஸ்மி கேள்வி
சென்னை: Mansoor Ali Khan (மன்சூர் அலிகான்) மடோனா செபாஸ்டியன் பற்றி முகம் சுளிக்கும்படி மன்சூர் அலிகான் பேசியபோது த்ரிஷா ஏன் அமைதியாக இருந்தார் என்று பிஸ்மி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
லியொ படத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'த்ரிஷாவுடன் பெட் ரூம் சீன் இருக்கும் என நினைத்தேன். பாலியல் வன்கொடுமை செய்யும் சீன் இருக்கும் என நினைத்தேன். எதுவுமே இல்லை' என ஆபாசமாக பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர்.

மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: பாரதிராஜா உள்ளிட்டோர் எல்லாம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் அவரோ மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று அலட்சியப்படுத்திவிட்டார். இதன் காரணமாக அவருக்கு எதிராக மேற்கொண்டு கண்டனங்கள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன.
வழக்குப்பதிவு: இதற்கிடையே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபிக்கு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி அவர் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அவர் நேற்று காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகவும் செய்தார்.
பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "த்ரிஷாவின் தைரியத்தை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனால் லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான் இதேபோன்றுதான் பேசினார். த்ரிஷாவில் ஆரம்பித்து மடோனா செபாஸ்டியனில் சென்று தனது ஆபாச பேச்சை முடித்தார். அப்போது த்ரிஷாவும், விஜய்யும் சிரித்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
அப்பவே கேட்டிருக்கணும்: மடோனா செபாஸ்டியன் பற்றி அவர் ஆபாசமாக பேசியது அன்றைக்கு இனித்ததா?. இப்போது உங்களை பற்றி (த்ரிஷா) பேசும்போது பொங்குகிறீர்கள். நியாயப்படி பார்த்தால் லியோ சக்சஸ் மீட்டிலேயே மன்சூர் அலிகான் பேச்சுக்கு த்ரிஷா எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும். நேராக மேடைக்கு சென்று அவரது மைக்கை பிடுங்கி இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது என்று சொல்லியிருக்க வேண்டும்.
சரி விஜய் படத்தின் விழா. அப்படி நடந்துகொண்டால் அவர் கோபித்துக்கொள்வார் என்று த்ரிஷா நினைத்திருந்தால் அங்கிருந்தே மன்சூர் அலிகானை கண்டித்து ஒரு ட்வீட் செய்திருக்கலாம். இல்லையென்றால் அடுத்த நாளாவது ட்வீட் போட்டிருக்கலாம். இப்போதும் அந்த ட்வீட்டைத்தானே போட்டிருக்கிறார். அந்த இடத்தில் அமைதி காத்துவிட்டு இப்போது ஏன் பொங்குறீங்க என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும் தன்னை பற்றி ஒருவர் ஆபாசமாக பேசிவிட்டார் என்றதும் த்ரிஷா அதற்கு ரியாக்ட் செய்தது நல்ல விஷயம்தான்" என்றார்.
மன்சூர் அலிகான் பேச்சு: முன்னதாக லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலிகான், "த்ரிஷாவுடன் லியோ படத்தில் அது இது இருக்கும் என நினைத்தேன் ஆனால் அவரிடம் என்னை நெருங்கவே விடவில்லை. சரி அவர்தான் இல்லை மடோனா பாப்பா இருக்காங்க. அவங்களோட ஜாலியா இருக்கலாம் என்று பார்த்தால் அவர் தங்கச்சி ரோல்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











