மனீஷா யாதவ்வை சமாதானம் செய்ய முயன்றார் சீனு ராமசாமி.. பிஸ்மி பகிர்ந்த சீக்ரெட்.. இது எப்ப முடியுமோ?

சென்னை: Manisha Yadav Seenu Ramasamy Controversy (மனீஷா யாதவ் சீனு ராமசாமி சர்ச்சை) நடிகை மனீஷா யாதவ்வை இயக்குநர் சீனு ராமசாமி சமாதானம் செய்ய முயன்றதாக பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

த்ரிஷா - மன்சூர் அலிகான் பஞ்சாயத்துக்கு பிறகு கோலிவுட்டில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து மனீஷா யாதவ் - சீனு ராமசாமி பஞ்சாயத்து. பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தபோது நடிகை மனீஷா யாதவ்வுக்கு சீனு ராமசாமி அவ்வளவு பாலியல் தொல்லைகள் கொடுத்தார். அதுதொடர்பான ஆதாரங்கள் அனைத்துமே என்னிடம் இருக்கின்றன. இதுதான் சீனு ராமசாமியின் உண்மையான முகம்’ என கூறியிருந்தார்.

Journalist Bismi Released New Video About Manisha yadav Seenu Ramasamy Controversy

அதிர்ச்சி: சீனு ராமசாமி மீது பிஸ்மி வைத்த குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிஸ்மியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த சீனு ராமசாமி, ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனக்கு மனீஷா யாதவ் நன்றி சொல்லும் வீடியோவை பகிர்ந்து இவரா என்னால் சினிமாவை விட்டு விலகினார் என்று கேள்வி எழுப்பினார்.

மனீஷா யாதவ்வின் பதில்: நடக்கும் விஷயங்களை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மனீஷா யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நான் எப்போது சீனு ராமசாமியின் படத்தில் பணியாற்றுகிறேன். ஒரு குப்பை கதை விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்னேன். அப்போது சீனு ராமசாமியும் மேடையில் இருந்ததால் அவருக்கு அந்த நன்றியை சொன்னேன். அந்த நன்றியால் நடந்த விஷயங்கள் எதுவும் மாறிவிடாது. 9 வருடங்களுக்கு முன்பு நான் சொன்ன வார்த்தைகளில் உறுதியாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

வீடியோ நீக்கம்: சூழல் இப்படி இருக்க சீனு ராமசாமி குறித்து பிஸ்மி பேசியிருந்த பேட்டி சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பேட்டி நீக்கப்பட்டதற்கு காரணம் சீனுவின் அழுத்தம்தான் என்று தொடர்ந்து கூறப்படுகிறது. இதற்கிடையே சீனு ராமசாமியின் ஆதரவாளர்களோ, 'மனீஷா யாதவ்வுக்கு ஒழுங்காக நடிக்க வரவில்லை. அதனால்தான் இடம் பொருள் ஏவல் படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார். அதை மறைப்பதற்காகத்தான் அவர் இப்படி பாலியல் புகாரை தெரிவித்திருக்கிறார் என்கின்றனர்.

பிஸ்மியின் புதிய வீடியோ: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிஸ்மி பேசியிருக்கும் புதிய வீடியோவில், “சீனு ராமசாமி மனீஷா யாதவ்வை தொடர்புகொண்டு தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை மனீஷா நிராகரித்துவிட்டார். அதற்கு காரணம் என்னவென்றால் இடம் பொருள் ஏவல் படத்தில் சீனு ராமசாமி எப்படி நடந்துகொண்டார் என்பதை மனீஷா யாதவ் இன்னும் மறக்கவில்லை.

சீனு ராமசாமியின் தந்திரம்: அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்துவிட்டால் மனீஷா யாதவ்வுக்கு தான் பாலியல் தொல்லை கொடுக்கவில்லை என்பது போன்ற பிம்பம் உருவாகும். அதுதான் அவருடைய தந்திரம்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X