அந்த விஷயத்தை மூட்டை கட்டும் அனிருத்?.. அவர் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இப்போது அவர்தான் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடைசியாக அவரது இசையமைப்பில் வேட்டையன், இந்தியன் 2, தேவரா, விடாமுயற்சி உள்ளிட்ட ஏராளமான படங்கள் வெளியாகின. அடுத்ததாக கூலி, ஜன நாயகன் ஆகிய படங்களும் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ரஜினியின் உறவினரான அனிருத் தனுஷ் நடிப்பில் உருவான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஐஸ்வர்யா இயக்கியிருந்த அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது.முக்கியமாக அனிருத்தின் இசை மெகா ஹிட்டடித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி முதல் படமான ரோஜாவில் சென்சேஷன் ஆனாரோ அதேபொல் 3 படத்திலும் ரீ ரெக்கார்டிங், பாடல்கள் என அனைத்திலுமே தனது தனித்த முத்திரையை பதித்தார்.

ஒய் திஸ் கொலவெறி: 3 படத்தின் ஆல்பத்தில் எல்லா பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும்; ஒய் திஸ் கொலவெறி பாடல் மெகா ஹிட்டானது. இதன் காரணமாக ஒரே நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் அனிருத் சந்திக்கும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தது. அந்தப் பாடலின் வெற்றிக்கு பிறகு அனிருத்தை தெரியாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Journalist Bismi Reveal New Information about Anirudh

குவிந்த வாய்ப்புகள்: முதல் பட பாடல்களின் வெற்றிக்கு பிறகு எங்கும் அனிருத் மயமாகத்தான் இருந்தது. இளம் ஹீரோக்கள் முதல் வளர்ந்த ஹீரோக்கள்வரை அனிருத்திடம் சென்றனர். முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய் படம் என்றாலே அனிருத்தான் என்று ஃபிக்ஸ் செய்யப்பட்டது. ரஜினி படங்களில் ஜெயிலர், வேட்டையன், ஜெயிலர் 2 என வரிசையாக கமிட்டானார். அதேபோல் கடைசியாக வெளியான விஜய் படங்களில் வாரிசு, GOAT படம் தவிர்த்து மற்ற எல்லா படங்களுக்குமே அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இசையமைக்கும் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கின்றன விமர்சனத்தையும் சந்திக்கின்றன.

செம பிஸியான அனிருத்: கடைசியாக அவரது இசையமைப்பில் விடாமுயற்சி, இந்தியன் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகின். அந்த இரண்டு படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக ரஜினியின் கூலி, விஜய்யின் ஜன நாயகன் ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கூலி படத்திலிருந்து முதல் சிங்கிள் நாளை வெளியாக்விருக்கிறது. அதனை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார்.

அனிருத் எடுத்திருக்கும் முடிவு: இதற்கிடையே உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இசை கச்சேரி நடத்துவதிலும் பிஸியாக இருக்கிறார் அனிருத். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்றை பிஸ்மி வெளியிட்டிருக்கிறார். அதாவது அவர் கான்செர்ட்டுகளை அடிக்கடி நடத்துவதன் காரணமாக திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் முழு கவனம் செலுத்த முடியவில்லை என்றும்; வேலையும் தாமதமாவதால்; சில மாதங்களுக்கு இசை நிகழ்ச்சி நிறுத்தப்போவதாக முடிவெடுத்திருக்கிறார் என்று பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X