திரிஷாவின் கணவர் அவர்தானா?.. அப்படி கேட்டவரிடம் மேடத்துடைய அம்மா நடந்துகொண்ட விதம் செம டீசன்ட்!
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் திரிஷா. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பு திரைப்படம் மெகா ஹிட்டடித்தது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வரவிருக்கிறது. கண்டிப்பாக அந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் அவரும் இருக்கிறார். இதற்கிடையே தொடர்ந்து அவரது பெயர் சமீபமாக சர்ச்சையில் சிக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
திரிஷா தனது கரியரை ஆரம்பித்த சில வருடங்களிலேயே அவரது பெயர் குளியலறை வீடியோ தொடர்பான சர்ச்சையில் சிக்கியது. அதனையடுத்து சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டதால் திருமணம் வரை செல்லவில்லை. கண்டிப்பாக திருமணத்துக்கு பின்பும் நடிப்பது என்பதில் செம உறுதியாக இருக்கிறார்.

மீண்டும் சர்ச்சை: அதற்கு பிறகு அவரது பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆகாமல் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் பல வருடங்கள் கழித்து விஜய்யுடன் மீண்டும் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில்தான் அந்த ரீ யூனியன் நடைபெற்றது. வழக்கம்போல் அவர்களது கெமிஸ்ட்ரில் ஆன் ஸ்க்ரீனில் பட்டையை கிளப்பியது. அந்த ஷூட்டிங் சமயத்தில் விஜய்யுடன் வெளிநாடுகளில் இருப்பது போன்ற புகைப்படங்களை எல்லாம் அடிக்கடி ஷேர் செய்துவந்தார் திரிஷா. இதனால் மீண்டும் விஜய் - திரிஷா பெயரை இணைத்து வைத்து கிசுகிசுக்கள் வந்தன.
உறுதிப்படுத்திய சங்கீதா?: இப்படிப்பட்ட சூழலில்தான் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டதோடு மட்டுமின்றி, நடிகையும், எனது கணவரும் உறவில் இருக்கிறார்கள். தன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அந்த நடிகை அடிக்கடி பகிர்வார் என குண்டை தூக்கிப்போட்டார். உடனே திரிஷா ஷேர் செய்த ஃபோட்டோக்களுடன் இந்த விஷயத்தை முடிச்சு போட்டு; அந்த நடிகை திரிஷாதான் என்று உறுதி செய்தார்கள் ரசிகர்கள். அதேசமயம் திரிஷாவும், விஜய்யுமேகூட சேர்ந்து ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார்கள்.
திரிஷாவின் கணவர்: சமீபத்தில் அஜித் தாயின் இறப்புக்கு கூட இரண்டு பேரும் ஒன்றாகத்தான் சென்றார்கள். இதற்கிடையே சூர்யா என்பவர், 'தான் தான் திரிஷாவின் கணவர். ஒழுங்காக விஜய்யிடமிருந்து திரிஷா விலகிவிட வேண்டும்' என தனது வாய்க்கு வந்தபடி சில பேட்டிகளில் உளறிக்கொண்டிருந்தார். அதனை திரிஷா தரப்பு கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
பிஸ்மி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சில காலத்துக்கு முன்பு சூர்யா என்பவர் எல்லா யூடியூப் சேனல்களிலும் அமர்ந்துகொண்டு, நான் திரிஷாவின் கணவர் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். யூடியூப் சேனல்களும் அது உண்மையா இல்லை பொய்யா என்பதை தெரியாமல் ஒளிபரப்பினார்கள். நான் அந்த சமயத்தில் திரிஷாவின் தாயை தொடர்புகொண்டு, 'உங்கள் மகளின் கணவர் என சூர்யா சொல்கிறார். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே?' என கேட்டேன். அதற்கு அவரோ, 'இல்லை நாங்கள் வழக்கு போட்டு அவரை பெரிய ஆள் ஆக்க விரும்பவில்லை' என சொல்லிவிட்டார். இதுதான் நடிகைகளின் பலவீனம். அதனால்தான் எல்லோரும் இஷ்டத்துக்கு பேசுகிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications
