இந்தியன் 3க்கு 6 மாசம் வொர்க் இருக்கா?.. வேள்பாரி தயாரிப்பாளரை நினைச்சா தான்.. ஷங்கரை சாடிய பிஸ்மி!

சென்னை: இந்தியன் 2 படத்தின் மிகப்பெரிய தோல்விக்குப் பிறகு இந்தியன் 3 படத்துக்கு இன்னமும் 6 மாசம் சிஜி பணிகள் எல்லாம் இருக்கிறது என மீண்டும் லைகா நிறுவனத்தின் தலையில் ஷங்கர் மிளகாய் அரைப்பது எல்லாம் எவ்வளவு பெரிய வேடிக்கை என்று சொல்லவே முடியவில்லை. பொங்கலுக்கு வெளியான ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தால் வீட்டையே விற்கும் நிலைமைக்கு தில் ராஜு வந்துவிட்டார் என்றும் பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த லட்சணத்தில் அடுத்து வேள்பாரி படத்தை 3 பாகங்களாக ஷங்கர் உருவாக்கப் போவதாக பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படி தொடர் தோல்விகளை கொடுத்து தன்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டதை ஷங்கர் நிரூபித்த பின்னரும் அவரை நம்பி பல கோடி முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் இருந்தால் தாராளமாக ஷங்கர் வேள்பாரி படத்தை எடுக்க வேண்டியது தான் என பிஸ்மி போட்டு பொளந்திருக்கிறார்.

shankar bismi velpari


தனது தயாரிப்பாளர்களுக்கு கூட முழு படத்தையும் போட்டுக் காட்டமாட்டேன் என ஷங்கர் முரண்டு பிடிக்க காரணமே போட்டுக் காட்டும் அளவுக்கு படம் வொர்த்தாக எடுக்கவில்லை என்பதால் தான் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குநர்: ஒரு காலத்தில் இல்லை இப்போதும் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குநர் தான். அதில், எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. 17 கோடி ரூபாயை கொட்டி ஒரு பாடலை எடுத்து கடைசியாக தியேட்டருக்கு வரும் போது அந்த பாடல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரையிடப்படாது என்று சொல்லும் அளவுக்கு பிரம்மாண்ட இயக்குநர். 75 கோடி ரூபாய் செலவு செய்து அனைத்து பாடல்களையும் உருவாக்கிய ஷங்கர் ஒரு பாட்டைக் கூட ஹிட்டாக்க முடியவில்லையே என்பதை நினைத்து நிச்சயம் வருத்தப்பட வேண்டும் என்றும் பிஸ்மி பேசியுள்ளார்.

இந்தியன் 3க்கு இன்னும் செலவு பண்ணுவாங்களா?: இந்தியன் 2 படத்துக்கு பண்ண செலவுக்கே அந்த படம் எந்தவொரு லாபத்தையும் ஈட்டுத் தராமல் நஷ்டத்தை தேடிக் கொடுத்தது. கேம் சேஞ்சர் படத்தை ரசிகர்கள் பார்க்க தியேட்டர் பக்கம் போகாமல் இருக்க முக்கிய காரணமே இந்தியன் 2 சொதப்பல் தான். இந்நிலையில், இன்னமும் 6 மாசம் சிஜிக்கு செலவு செய்தால் தான் அந்த படம் தியேட்டருக்கு வரும் என ஷங்கர் சொல்ல அதற்கும் தயாரிப்பாளர்கள் தலையை ஆட்டிக் கொண்டு செலவு செய்தால், படம் வெளியாகி 2 நாள் கூட ஓடவில்லை என்றால் யாருக்கு நஷ்டம் என கேட்டுள்ளார்.

வேள்பாரிக்கு தயாரிப்பாளர் கிடைப்பார்களா?: ஷங்கரின் பிரம்மாண்டத்துக்கு கேம் ஓவர் போட்டுவிட்டது கேம் சேஞ்சர் படம். இனிமேல், அவர் தான் ஒரு சிறந்த இயக்குநர் என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் அவர் தயாரிப்பில் சிறு பட்ஜெட்டில் படங்கள் வெளியானதை போல ஒரு நல்ல படத்தை குறைவான பட்ஜெட்டில் எடுத்துக் காட்டி ஹிட் கொடுத்துவிட்டு அவர் தாராளமாக வேள்பாரி பக்கம் போகலாம். பல நூறு கோடிகள் முதலீடு போட்டு அவுட்டேட்டட் ஆன ஷங்கரை நம்பி பணம் போட தயாரிப்பாளர்கள் இருந்தால் தாராளமாக அவர் வேள்பாரி படத்தை எத்தனை பாகங்களாக வேண்டுமானாலும் எடுக்கட்டும் என்றும் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X