வீர தீர சூரன் ஃபிளாப்பா?.. பத்திரிகையாளர் பிஸ்மி சொன்ன பகீர் ரிப்போர்ட்.. மொத்த வசூல் எவ்வளவு?
சென்னை: அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 27ம் தேதி திரைக்கு வந்த படம் தான் வீர தீர சூரன். முதல் நாளே வழக்கு காரணமாக படம் காலையில் வெளியாகாமல் மாலை நேரத்தில் தான் வெளியானது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் பிக்கப் ஆனது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திங்கட்கிழமையும் ஓடியது.
ஆனால், அதன் பின்னர் டல் அடிக்கத் தொடங்கிய வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வார இறுதி நாட்களில் கூட பெரிய வசூல் சாதனையை படைக்கவில்லை என்கின்றனர். மேலும், இந்த படம் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாக பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த பல ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக ஃபிளாப் ஆகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
52 கோடி வசூல் அறிவிப்பு: வீர தீர சூரன் கடந்த 11 நாட்களில் இதுவரை இந்தியளவில் 37 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக Sacnilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. உலகளவில் வீர தீர சூரன் திரைப்படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸ் கடந்த ஏப்ரல் 7ம் தேதி அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு 2வது வாரம் மக்களை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டது. ஆனால், அதன் பின்னர், எந்தவொரு வசூல் அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.
வீர தீர சூரன் ஃபிளாப்பா?: அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை என பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என இந்த படத்தை வாங்கிய அனைத்து இடங்களை சேர்ந்த விநியோகஸ்தர்களுக்கும் பலத்த நஷ்டம் என்றும் அவர் திடுக்கிட வைத்துள்ளார்.
போலி பிம்பம்: தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு ஹீரோக்களுக்கு முக ஸ்துதி பாடுவதால் தான் போலியான வசூல் அறிவிப்புகள் வருவதாகவும் உண்மையிலேயே படம் வசூல் வேட்டை நடத்தவில்லை என்றும் இந்த முறையும் விக்ரம் படத்துக்கு மிகப்பெரிய இழப்பு தான் என பிஸ்மி பகீர் கிளப்பியுள்ளார். வீர தீர சூரன் திரைப்படத்துக்கு இந்த வாரம் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் மிகப்பெரிய தலைவலியாக மாறும் என தெரிகிறது. 100 கோடி வசூலை நோக்கி கூட விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் போகுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர். வசூலை தாண்டி சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக வீர தீர சூரன் அமைந்துள்ளது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
குட் பேட் அக்லி வசூல் எப்படி இருக்கும்?: அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி சில நாட்கள் ஆகும் நிலையில், இன்னமும் பல திரையரங்குகள் முதல் நாள் கூட ஹவுஸ்ஃபுல் ஆக முடியாமல் தவித்து வருகின்றன. கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் மக்களை ரொம்பவே சோதித்தது தான் குட் பேட் அக்லி படத்துக்கான எதிர்பார்ப்பு பெரிதாக மக்கள் மத்தியில் இல்லாததற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஹவுஸ்ஃபுல் ஆக்கிவிட வேண்டுமென்று அஜித் ரசிகர்கள் முடிந்தவரை டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











