Rajini: சூதாட்டத்தில் பல கோடிகளை இழந்தாரா ரஜினிகாந்த்.. சினிமா பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் ரூ 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிக்கு ரூ.100 கோடி காசோலை மற்றும் கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி கௌரவித்தார். மேலும், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் ஆடம்பர காரை பரிசாக வழங்கினார்.

Journalist Bismi shared shocking information about superstar rajinikanth

ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ரஜினி கலாநிதி மாறன் வாங்கிக் கொடுத்த காரில் தான் நான் வந்தேன். இப்ப தான் பணக்காரன் ஆகிவிட்டேன் என்ற உணர்வே எனக்கு வந்துள்ளது என்று பேசி இருந்தார்.

அம்பாஸ்டர் கார்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இந்த பேச்சு குறித்து பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, ஒரு வகையில் அவர் பேச்சு பார்க்கும் போது சரி என்றும், மற்றொரு வகையில் அவர் கலாநிதி மாறனுக்காக மிகவும் மிகைப்படுத்தி பேசி இருக்கிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ரஜினி மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்த நிலையிலும், அம்பாசிட்டர் காரை தான் நீண்ட வருடங்கள் பயனபடுத்தினார். பத்து வருடத்திற்கு முன்பு வரையிலும் அம்பாஸ்டர் காரைத்தான் பயன்படுத்தினார்.

இன்னோவா காருக்கு மாறினார்: அவருக்கு பின்னர் வந்த நடிகர்கள் எல்லாம் சொகுசு காரில் வந்த போது, ரஜினி எளிமையான காரில் தான் படப்பிடிப்புக்கு போவார் வருவார். ரஜினி அன்றைக்கு நினைத்திருந்தால் பல சொகுசு கார்களை வாங்கி இருக்கலாம். ஆனால் எளிமையை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தாரோ என்னவென்று தெரியவில்லை. பல வருடங்களாக அம்பாஸ்டர் காரை பயன்படுத்தினார். அதன் பிறகு தான் இன்னோவா காருக்கு மாறினார். இதனால், இது பணக்காரர்கள் ஓட்டும் கார் என்ற பீல் வந்து இருக்கலாம்.

எத்தனை கோடிகள்: ரஜினி இவ்வளவு செல்வந்தராக இருந்தாலும், அவரிடம் எத்தனை கோடிகள் இருக்கிறது என்று எண்ணுவதற்கு இந்த இரண்டு கை விரல்களே பத்தாது, இன்னும் இரண்டு ஆயிரம் பேரின் விரல்களும் பத்தாது. ஆனாலும், அவர் மனதளவில் மிகவும் எளிமையானவராகவே இருக்கிறார். மற்றொரு புறம் இது மிகையான பேச்சாக பார்க்கக் காரணம் என்ன வென்றால்,

சூதாடி தோற்றார்: அதேநேரம் ரஜினி சொகுசு காரில் போகவில்லையே தவிர வாழ்க்கை முழுக்க சொகுசு வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார். படத்திற்கு ரூ.100 கோடி, ரூ.150 கோடி சம்பளம் வாங்கும் நீங்கள் அந்த பணத்தை எட்டப்படி செலவு செய்வது என்று தெரியாமல், லாஸ்வேகாஸ் கிளம்பிபோயி அங்கு சூதாடி இங்கு சம்பாதித்த பணத்தையெல்லாம் தோற்றுவிட்டு அப்பாடா..என்று மனசு ரிலாக்ஸ் ஆகி வருகின்ற வாழ்க்கையை தான் ரஜினி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது நீங்கள் சொகுசு காரில் பயணித்ததால் தான் பணக்காரன் ஆனேன் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X