அந்த நடிகரோட ரசிகர்கள் பூமிக்கே பெரிய பாரம்.. ரொம்ப டேஞ்சர்.. பிஸ்மி கிளப்பிய புது பஞ்சாயத்து!
சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்தது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால் பொங்கலுக்கு படம் ரிலீஸாகாது என்று திடீரென்று அறிவிப்பு வெளியானது. இதனால் உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சோகமடைந்தார்கள். இந்தச் சூழலில் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போனது குறித்தும் அஜித்தின் ரசிகர்கள் குறித்தும் பத்திரிகையாளர் பிஸ்மி சில விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தின் ஷூட்டிங் தொடங்கி மிகவும் மெதுவாக வேலைகள் நடந்து ஒருவழியாக படம் முடிவடைந்துவிட்டது. படத்தின் டீசர், சிங்கிள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்ற சூழலில் ஜனவரி பத்தாம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று படக்குழு அறிவித்தது. ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தப் படம் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஸ்மி பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் அஜித்தின் ரசிகர்கள் குறித்தும் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸானால் தியேட்டரில் சென்று பாருங்கள். அப்படி இல்லையென்றால் வேறு வேலையை பாருங்கள். ரிலீஸ் தள்ளிப்போனால் எதற்காக இடிந்து போய் உட்கார வேண்டும். ஒரு படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. அதுவும் அஜித் மாதிரியான ஸ்டார் நடிகரை வைத்து படம் எடுப்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று.
சமூகத்துக்கு ஆபத்து: ஆனால் இந்த மூளை மங்கிப்போன ரசிகர்கள் நாம் பொறாமையில் பேசுவதாக சொல்கிறார்கள். ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதைக்கூட ஏற்க முடியாமல் இருப்பவர்கள் எல்லாம் பூமியின் சுமைகள்தான். அவர்கள் இருப்பதெல்லாம் சமூகத்துக்கே ஆபத்தான ஒன்றுதான். விடாமுயற்சி படத்தில் பல பிரச்னைகள் இருக்கின்றன. முதலில் இயக்குநருக்கும், தயாரிப்பாளுக்கும் இடையே பிரச்னை வந்தது. அடுத்ததாக கதை திருட்டு பிரச்னை வந்தது. முக்கியமாக லைகாவுக்கு இருக்கும் பண பிரச்னையும் ரொம்பவே அதிகம்.
இந்த சிக்கலும்: அதேபோல் விடாமுயற்சி படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக பல கோடி ரூபாய் செட்டில் செய்ய வேண்டிய சிக்கலும் இருக்கிறது. சினிமாவில் இருக்கும் நண்பர்கள் மூலம் கிடைக்கும் தகவல்களைதான் நாங்கள் நேயர்களுக்கு சொல்கிறோம். குட் பேட் அக்லி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றுதான் அறிவித்தார். அதற்கு முன்னதாகவே விடாமுயற்சி ரிலீஸாகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் லைகாவுக்கும், இயக்குநருக்கும் இருக்கும் பிரச்னையால்தான் இந்தப் படம் வெளியாவதில் சிக்கல் உருவானது. மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னமும் ஐந்து வருடங்கள்கூட படம் எடுப்பார்.
நயனின் சாபமா?: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அதிலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறினார். இதனால் நயன்தாரா விட்ட சாபம்தான் இப்படி எல்லாம் நடந்ததற்கு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் அப்படி சொல்வதெல்லாம் சுத்த பொய். இந்தப் படம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டதற்கு இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடந்த பிரச்னைதான் முழு காரணம்” என்றார்.


Click it and Unblock the Notifications











