கங்குவா என்ன பெருமையை ஏற்படுத்திவிட்டதா?.. ஏன் ஜோதிகா இப்படியெல்லாம்?.. பிரபலம் காட்டிய அதிரடி
சென்னை: சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தது. அதனையடுத்து நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இந்தப் படத்தின் மீது வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்களை வைக்கிறார்கள் என்று சப்போர்ட் செய்திருந்தார். அது மேற்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி இந்த விவகாரம் குறித்து சற்று காட்டமாகவே ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
சூர்யாவின் கரியரில் அஞ்சான் படத்துக்கு பிறகு கங்குவா திரைப்படம் மிகப்பெரிய ட்ரோல்களை சந்தித்த படமாக இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகா சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் கங்குவா மீது வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். அது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.

பிஸ்மி கொடுத்த பேட்டியில், "விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கும்தான் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன. அனைத்து பெரிய திரைப்படங்களின் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பெரிய படம், சின்ன படம் என்பதை வைத்தெல்லாம் விமர்சனம் செய்ய முடியாது. அந்தப் படங்கள் மக்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை வைத்துதான் விமர்சனம் வைக்க முடியும். கங்குவா படத்தை பொறுத்தவரை மக்களிடம் படக்குழு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
காட்சிகளை தூக்குங்கள்: மூன்று மணி நேரத்தில் அரைமணி நேரம் படத்தில் சரியில்லை என்று ஜோதிகா கூறியிருக்கிறார். எனில் அந்தக் காட்சிகளை படத்திலிருந்து நீக்கியிருக்க வேண்டியதுதானே. ஏன் நீக்கவில்லை. மக்கள் அதையும் வந்து பார்க்க வேண்டும் என்று சொல்கிறாரா. மற்ற பெரிய படங்களில் டபுள் மீனிங், பெண்களை பின் தொடர்ந்து தொல்லை செய்யும் சீன்கள் இருப்பதாக ஜோதிகா கூறுகிறார். கங்குவாவில் பெண்களை பெருமைப்படுத்திவிட்டார்களா.
பிகினி திஷா: படத்தில் திஷா பதானி பிகினி உடை அணிந்திருந்தாரே. அது என்ன பெண் இனத்துக்கே பெருமை சேர்த்த விஷயமா. சூர்யாவின் மனைவியாக அந்தப் பதிவை எழுதவில்லை என்று ஜோதிகா சொன்னதெல்லாம் பொய். அவர் சூர்யாவின் மனைவியாகத்தான் அந்தப் பதிவை எழுதியிருக்கிறார்" என்றார் காட்டமாக.


Click it and Unblock the Notifications











