வேறு ஆள் இல்லை.. அதனால்தான் நயன்தாரா இப்படி இருக்கிறார்.. விட்டு விளாசிய பிரபலம்

சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி, ஜவான் ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். அந்த இரண்டு படங்களில் ஜவான் மெகா ஹிட்டடிக்க; அவரது 75ஆவது படமான அன்னபூரணி கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட், டாக்சிக் உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி காட்டமாக பேசியிருக்கிறார்.

நடிகை நயன்தாரா நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். திருமணத்துக்கு பிறகு பெரும்பாலும் சர்ச்சையில் சிக்காமல் இருந்த அவர்கள் சமீபமாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். மேலும் அவர்களை பலரும் கடுமையாக கண்டித்தும், விமர்சித்தும்வருகிறார்கள்.

nayanthara vignesh shivan bismi

தனுஷுடன் மோதல்: நயனின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவணப் படம் ஒன்று உருவானது.அதில் நானும் ரௌடிதான் படத்தின் இசையையும், சில ஃபுட்டேஜுகளையும் பயன்படுத்துவதற்கு தனுஷிடம் அனுமதி கோரினார்கள் நயனும், விக்கியும். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். இருந்தும் அதன் ட்ரெய்லரில் மூன்று நொடிகள் ஃபுட்டேஜை பயன்படுத்தினார்கள். இதனையடுத்து தனுஷ் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப; நயன் காட்டமாக கடிதம் ஒன்றை எழுதினார்.

நீதிமன்றத்தில் வழக்கு: இந்த விவகாரம் ஓய்வதற்குள் நயனின் ஆவணப் படத்தில் 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றன. இதனால் கொதித்தெழுந்த தனுஷ் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இப்போது நடந்துவருகிறது. மேலும் நயன் அப்படி செய்ததற்கு பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நயனின் பேட்டி: இந்த சர்ச்சை கொஞ்சம் அடங்குவதற்குள் நயன் கொடுத்த பேட்டி ஒன்று பெரும் சர்ச்சை ஆனது. ஆங்கில தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வலைப்பேச்சு டீமை சேர்ந்த பிஸ்மி, அந்தணன், சக்திவேல் ஆகிய மூன்று பேரையும் குரங்குகள் என்று கூறினார். அது பெரும் விமர்சனத்தை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி இவர் எப்படி உருவ கேலி செய்யலாம் என்று பலரும் பேசினார்கள். அந்தப் பேட்டிக்கு பிறகு நயன் பற்றி வலைப்பேச்சு குழுவினரும் காட்டமாக பேசிவருகிறார்கள்.

nayanthara vignesh shivan bismi

பிஸ்மி பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிஸ்மி அளித்த பேட்டியில், "விக்னேஷ் சிவனுக்கு பண வெறி கண்ணை மறைத்துவிட்டது. நயன்தாராவை பொறுத்தவரை அவரது திறமைக்கும், அழகுக்கும் தாண்டி நூறு மடங்கு அதிகமாக சம்பளமாக வாங்குகிறார். தயாரிப்பாளர்களுக்கும் பெரிய அறிவு இல்லை. எதற்காக இவ்வளவு சம்பளம் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.முக்கியமாக தமிழ்நாட்டில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க சரியான ஹீரோயின்கள் இல்லை. அதன் காரணமாகத்தான் நயன்தாராவின் வண்டி இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X