3 குரங்குகள் என விளாசிய நயன்தாரா.. பதிலுக்கு லேடி சூப்பர் ஸ்டாரை பிஸ்மி என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே சர்ச்சைகளின் உருவமாக மாறியிருக்கிறார் நயன்தாரா. தனுஷுடன் மோதியது, ரஜினிகாந்த் குறித்தும் பத்திரிகையாளர்கள் குறித்தும் பேசியது என அவரை சுற்றி விமர்சனங்களும், சர்ச்சைகளும் அவ்வளவு எழுந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

கேரளாவில் பிறந்த மரியம் டயானா என்கிற இயற்பெயரை கொண்ட நயன்தாரா தமிழில் ஐயா படத்தில் நடிகையாக அறிமுகமானார். முதலில் பார்த்திபன் இயக்கி நடித்த குடைக்குள் மழை படத்தில்தான் ஹீரோயினாக அறிமுகமாகவிருந்தார். ஆனால் ஆடிஷனுக்கு லேட்டாக வந்ததால் அவரை நடிக்க வைக்க பார்த்திபன் ஒத்துக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. பிறகுதான் ஐயா படத்தில் நடித்து பலரது கவனத்தை முதல் படத்திலேயே தன் பக்கம் திருப்பினார்.

nayanthara bismi vignesh shivan

முன்னணி நடிகை: ஐயா படத்துக்கு பிறகு சந்திரமுகி படத்தில் நடித்து கவனம் ஈர்த்த அவர் தொடர்ந்து சிம்பு, தனுஷ், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழின் டாப் நடிகையாக வலம் வந்தார். அந்த சமயத்தில்தான் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடனும், வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடனும் காதலில் விழுந்தார். ஆனால் அந்த இரண்டு காதல்களுமே பாதியில் முடிந்தன. முக்கியமாக பிரபுதேவாவை காதலித்தபோது ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தார் நயன்.

விக்கியுடன் திருமணம்: சூழல் இப்படி இருக்க நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். அந்தக் காதல் கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணத்தில் முடிந்தது. வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த நயன் திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவருகிறார். அந்தவகையில் ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; இன்னும் சில படங்களை கைவசமும் வைத்திருக்கிறார்.

தொழில்கள்: நடிப்பில் மட்டுமின்றி பிற தொழில்களிலும் பிஸியாக இருக்கிறார் நயன். ஸ்கின் கேர், ஃபெமி 9 என்ற நாப்கின் தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்டவைகளை நடத்திவரும் அவர்; சமீபகாலமாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். ஆவணப் பட விவகாரத்தில் தனுஷுடன் அவருக்கு மோதல் போக்கு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் அளித்த பேட்டி ஒன்றில் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். தொடர்ந்து ரஜினிகாந்த் குறித்தும் மட்டமான ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

பிஸ்மி விளாசல்: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,"நயன்தாரா எத்தனை மேடைகளில் ஏறி என்ன பேசினாலும் அவர் யார் என்று மக்களுக்கு தெரியும். அவர் ஒரு உண்மையானவரா என்பதையும் மக்கள் அறிவார்கள். படங்களுக்கு ப்ரோமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லும் அவர் தன்னுடைய தயாரிப்புகள் விற்க வேண்டும் என்பதற்காக ப்ரோமோஷனுக்கு செல்கிறார். அவர் ஒரு பொய்யான பெண்.

அகம்பாவம்: மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்குக்கூட நயன்தாரா 6 மணி நேரம் தாமதமாக சென்றிருக்கிறார். எம்ஜிஆர்தான் பொதுக்கூட்டங்களுக்கு தாமதமாக செல்வார். ஏனெனில் அவர் பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் ஏகப்பட்ட மக்களை சந்திப்பார். அவர்கள் செலுத்தும் அன்பை பெற்றுக்கொள்வார். இவரும் அன்பு செலுத்துவார். அப்படி அவர் லேட்டாக செல்வதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் நயன்தாரோவோ அகம்பாவத்தில் இருக்கிறார். அதனால் வேண்டுமென்றே அவர் தாமதமாக செல்கிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X