விக்னேஷ் சிவனுக்கு அடிப்படை அறிவு இல்லை.. நயன்தாரா புருஷன் என்பதுதான் அடையாளம்.. விளாசிய பிஸ்மி

சென்னை: போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன் பிறகு அவர் இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய எந்தப் படமும் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர் LIK என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார்.

சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. மேலும் அந்தப் படத்தின்போதுதான் அவருக்கும் நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் சில வருடங்கள் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்துவிட்டு திருமணம் செய்துகொண்டார்கள்.

nayanthara vignesh shivan

விக்னேஷ் சிவனின் படங்கள்: நயனை திருமணம் செய்த பிறகு விக்னேஷ் சிவன் அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் அந்தப் படத்தின் கதையில் உடன்பாடு இல்லாததால் அந்தப் படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனையடுத்து இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து LIK என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சீமான், க்ரித்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது

விலை பேசிய விக்னேஷ் சிவன்: சூழல் இப்படி இருக்க சமீபமாக சர்ச்சைகளிலும் சிக்க ஆரம்பித்திருக்கிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில்கூட புதுச்சேரிக்கு சென்று அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலை பேசினார். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை என்று அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கூற; விக்னேஷ் சிவனோ ஒப்பந்த அடிப்படையிலும் விலை பேசியிருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் கிளப்பியிருக்கிறது. அதுமட்டுமின்றி அவரை பயங்கரமாக கிண்டலும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

பிஸ்மி விளாசல்: இதற்கிடையே நயன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு குழுவினரை குரங்குகள் என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில் வலைப்பேச்சு குழுவில் ஒருவரான பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பணம் இருப்பவர்களிடம் அறிவு இருக்காது. அறிவு இருப்பவர்களின் பணம் இருக்காது. விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கணவர் என்கிற அடிப்படையில் அவரிடம் நிறைய பணம் கொட்டிக்கிடக்கிறது. அதை பல தொழில்களில் அவர் முதலீடு செய்கிறார்.

அடிப்படை அறிவு இல்லை: அவர் புதுச்சேரிக்கு சென்று அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசியிருக்கிறார். அதை பார்க்கும்போது, அரசுக்கு சொந்தமான சொத்தினை தனிநபர் வாங்க முடியாது என்கிற அடிப்படை அறிவு அவருக்கு இல்லை. அவர் முட்டாள் என்பது உறுடியாகியிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் போன்ற நிலைமைதான் இருக்கிறது.

கதவுகள் திறக்கின்றன: அதாவது நயன்தாராவின் புருஷன் என்கிற அடையாளத்தோடு மட்டும்தான் இருக்கிறார். அதுதான் அவருக்கு விசிட்டிங் கார்டாகவும் இருக்கிறது. அதைவைத்துதான் புதுச்சேரி அரசின் சொத்தை தன்வயப்படுத்த முயன்றிருக்கிறார். விக்னேஷ் சிவன் ஒரு இயக்குநர் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. அதேசமயம் அவர் நயன்தாராவின் புருஷன் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். அதன் காரணமாகத்தான் அனைத்து கதவுகளும் திறந்துகொண்டிருக்கின்றன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X