விடாமுயற்சிக்கு சிக்கல்..30 கோடி ரூபாயால் தீர்ந்ததா?..அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பிரபலம்

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே அந்தப் படம் பிரேக் டவுன் என்ற படத்தின் காப்பி என்றும்; அந்தப் படக்குழு லைகா நிறுவனத்திடம் நூறு கோடி ரூபாய்வரை நஷ்ட ஈடு கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். கடந்த வருடம் மே மாதம் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு ஷூட்டிங் ரொம்பவே ஸ்லோவாக நடந்தது. இடையில் ஒளிப்பதிவாளர் மாற்றம்; கலை இயக்குநர் மிலன் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மரணம்; லைகாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி என படம் பற்றி நெகட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருந்தன. ஒருகட்டத்தில் இந்தப் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாகவெல்லாம் தகவல்கள் வட்டமடிக்க ஆரம்பித்தன.

vidaamuyarchi ajith bismi

ரசிகர்கள் அப்செட்: இதன் காரணமாக அஜித்தின் ரசிகர்கள் உச்சக்கட்ட அப்செட்டாகினர். முக்கியமாக மகிழ் திருமேனி - அஜித்தின் காம்போவை பார்க்கவே முடியாதா என்றும் ஏங்கினார். மேலும் அஜித்தும் பைக்கை எடுத்துக்கொண்டு ரைடுக்கு கிளம்பிவிட்டார். இதன் காரணமாக இந்தப் படம் அவ்வளவுதான்; விடாமுயற்சிக்கு வாய்ப்பே இல்லை என்றெல்லாம் தங்களுக்குள் பேச ஆரம்பித்தார்கள். அந்தப் பேச்சுக்கு பலம் சேர்க்கும் விதமாக குட் பேட் அக்லி ஷூட்டிங்கிலும் அஜித் கலந்துகொண்டார்.

அந்த சீன்லாம் இல்லை: ஆனால் விடாமுயற்சி படம் ட்ராப் எல்லாம் ஆகவில்லை. கண்டிப்பாக ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். மேலும் படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் லுக்குகளும் வெளியாகின. இதன் காரணமாக உற்சாகத்தை இழந்திருந்த ரசிகர்கள் மீண்டும் உற்சாகமடைந்தனர். அஜித்தும் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களின் ஷூட்டிங்கிலும் கலந்துகொண்டு மாறி மாறி நடித்தார்.

வெளியான டீசர்: அஜித் ரசிகர்களுக்கு மேலும் உச்சக்கட்ட மகிழ்ச்சியாக விடாமுயற்சி படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. டயலாக்குகள் எதுவும் இல்லாமல் விஷுவல்களிலேயே மகிழ் திருமேனி டீசரை செதுக்கியிருந்தார். படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் சமீபத்தில்தான் முடிவடைந்தது. அதுகுறித்த புகைப்படங்களும் ட்ரெண்டாகின. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவிருக்கிறது. படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ந்த சிக்கல்: இதற்கிடையே இந்தப் படம் பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தின் காப்பி என்றும்; எனவே அந்தப் படக்குழு லைகா நிறுவனத்திடம் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "பிரேக் டவுன் படத்துக்கான ரைட்ஸை விடாமுயற்சி படக்குழு வாங்கவில்லை. அதன் காரணமாக நூறு கோடி ரூபாயை அவர்கள் நஷ்ட ஈடாக கேட்டார்கள். ஆனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 30 கோடி ரூபாயை லைகா நிறுவனம் வழங்கியிருக்கிறது. இதனால் விடாமுயற்சிக்கு இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X