Vichithra - விசித்திராவுக்கு கமல் ஹாசன் சப்போர்ட் செய்வாரா மாட்டாரா?.. பிரபலம் சொன்ன பதில்

சென்னை: Bigg Boss Vichithra (பிக்பாஸ் விசித்திரா) விசித்திரா சொல்லியிருக்கும் விஷயம் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அதற்கு கமலின் ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நடந்துகொண்டிருக்கிறது. இதுவரை பவா செல்லதுரை, பிரதீப் ஆண்டனி, அனன்யா, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, ஐஷு, கானா பாலா உள்ளிட்டோர் வெளியேறியிருக்கின்றனர். இவர்களில் பவா செல்லதுரை தானாக வெளியேறினார்; பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

Journalist Bismi Talks about Bigg Boss Vichithra Issue

விசித்திரா: பிரதீப் ஆண்டனி சென்ற பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் விசித்திரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் விளையாடும் முறையும்; அவர்கள் செய்யும் செயலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக விசித்திரா ஒவ்வொரு நாளும் கண்ட்டெண்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

பூகம்பம்: சூழல் இப்படி இருக்க நேற்று முன் தினம் பூகம்பம் டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் விசித்திரா சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோது டாப் ஹீரோ ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக தெரிவித்திருந்தார். அவர் கூறிய விஷயங்களை வைத்து பார்த்தபோது விசித்திரா குறிப்பிட்ட ஹீரோ பாலகிருஷ்ணாதான் என ரசிகர்கள் உறுதிபட பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

பலேவடிவி பாசு: அந்தப் படத்தின் பெயர் பலேவடிவி பாசு என்றும்; விசித்திராவை அறைந்த ஃபைட் மாஸ்டர் விஜய் என்றும் கூறுகின்றனர். சூழல் இப்படி இருக்க விசித்திரா சொன்ன இந்த விஷயத்துக்கு சனி, ஞாயிறு எபிசோடில் கமல் ஹாசன் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. முக்கியமாக பெண்கள் பாதுகாப்பு என்று பிரதீப் ஆண்டனியை வெளியேற்றிய கமல் இதில் என்ன மாதிரியான கருத்து சொல்லப்போகிறார் எனவும் கேள்வி எழுந்திருக்கிறது,

பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "சினிமாவில் காலங்காலமாக பாலியல் தொல்லை இருக்கிறது என்பதற்கு விசித்திரா சொன்ன விஷயம் ஒரு உதாரணம். இதில் கமல் ஹாசன் என்ன பேசப்போகிறார் என்பது சனி, ஞாயிறில் தெரிந்துவிடும். கமல் ஒரு நேர்மையான அரசியல்வாதியாக, நேர்மையான மனிதராக, தொகுப்பாளராக இருந்தால் விசித்திரா விஷயத்தை பேச வேண்டும்.

அதேசமயம் அப்படி பேசும்போது பாலகிருஷ்ணாவுக்கு பாதிப்பு இருக்கும் என்று தெரிந்தால் கமல் பேசமாட்டார். ஏனென்றால் பாலைய்யாவுக்கு ரசிகர்கள் அதிகம். கமல் ஹாசன் ஒரு பான் இந்தியா ஹீரோவாக இருக்கிறார். பாலைய்யாவுக்கு எதிராக கமல் கருத்து சொன்னால் அவரின் படத்தை ஆந்திராவில் ஓடவிடமாட்டார்கள். அதேபோல் இந்த விஷயத்தை மழுப்பலாக கமல் பேசவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X