Sivakarthikeyan - சிவகார்த்திகேயன் - டி. இமான் விவகாரம் - புதிய விஷயங்களை பகிர்ந்த பத்திரிகையாளர்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் - இமான் விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் பிஸ்மி ஓபனாக பேசியிருக்கிறார்.

 Journalist Bismi Talks about D.Imman Sivakarthikeyan Controversy

கோலிவுட்டில் சில வாரங்களுக்கு முன்பு பெரும் அதிர்ச்சியை கிளப்பிய விவகாரம் என்னவென்றால் சிவகார்த்திகேயன் மீது இமான் வைத்த குற்றச்சாட்டுதான். இந்த சூழலில் இவ்விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

பிஸ்மி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சிம்பு, தனுஷின் பர்சனல் பக்கங்கள் என்னவென்று மக்களுக்கு புரிந்துவிட்டது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அப்படி கிடையாது. அவரை பலரும் தங்கள் வீட்டு பிள்ளையாகவே நினைக்கிறார்கள். அந்த இமேஜ் இப்போது வெடித்திருக்கும் சர்ச்சையால் உடைந்து ஒரிஜினல் முகத்தை காண்பித்துவிட்டது. பிரபு நடித்த படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகிக்கொண்டிருந்தன.

பிரபு - குஷ்பூ உறவு: ஆனால் சின்னத்தம்பி படத்துக்கு பிறகு அவருக்கும் குஷ்பூவுக்கும் இருந்த உறவு பற்றி வெளியே தகவல் கசிந்தது. அது அவரது சினிமா கரியரை ரொம்பவே பாதித்தது. எப்போதுமே ஒரு நடிகரின் வளர்ச்சி என்பது அந்த நடிகர் நடித்த படங்களின் வெற்றி, தோல்வியை வைத்து நடக்கக்கூடியது. ஆனால் இந்த விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.

அதே விஷயம்தான்: பிரபுவுக்கு நடந்தது மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் இப்போது நடந்திருக்கிறது. சினிமா நடிகர்கள் என்றாலே பெர்சனல் வாழ்க்கையில் கள்ளக்காதல், தொழிலில் கருப்பு பணம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். அவர்களது வாழ்க்கையில் இவை இரண்டையும் தவிர்க்க முடியாது. ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கிறார்கள்.

நம்பிக்கை துரோகம்: இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்தது நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒருவர் உங்களை தம்பி மாதிரி பாவித்து வீட்டில் இடம் கொடுத்தால் அந்த இடத்தில் ரொம்பவே கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அங்கு சென்று கேடுகெட்ட செயலை காண்பித்தா அது மன்னிக்க முடியாத விஷயமாகும். இமான் ரொம்பவே அப்பாவியானவர்.

 Journalist Bismi Talks about D.Imman Sivakarthikeyan Controversy

மன்னிக்கமாட்டார்கள்: அவர் அந்தப் பேட்டியில் சொன்னது எதேர்ச்சையாக நடந்தது. மக்கள் பல விஷயங்களை மன்னித்துவிடுவார்கள். சில விஷயங்களை மன்னிக்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் நம்பிக்கை துரோகம். சிவகார்த்திகேயன் - டி.இமான் விஷயம் குறித்து பல மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும். இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரை எனக்கு தெரியும். அவர்தான் என்னிடம் இந்த விஷயத்தை ஆதாரங்களுடன் என்னிடம் பகிர்ந்தார்"" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X