இளையராஜாவை கடவுள் போல் பார்த்தார் ரஜினி.. ஆனால் அசிங்கப்பட்டுட்டார்.. பிரபலம் கிளப்பிய பகீர்

சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் புகழப்படுபவர் இளையராஜா. 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதற்கிடையே ராயல்டி கேட்டு இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸும் அனுப்பினார்; அதேபோல் வைரமுத்து பேசியதை வைத்தும் இளையராஜாவின் பெயர் மீண்டும் விவாத பொருளாக மாறியிருக்கிறது. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பிஸ்மி இளையராஜா விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

இளையராஜாவின் இசை எந்தத் தலைமுறைக்கும் பொருந்திப்போகக்கூடியது. 1975ஆம் ஆண்டு தொடங்கிய அவரது திரையிசை பயணம் இப்போதுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. காதல், சோகம், கோபம், துரோகம், மகிழ்ச்சி என எதுவாக இருந்தாலும் இளையராஜாவின் இசையை தேடித்தான் பலரது காதுகளும், மனதும் போகும். அந்த அளவுக்கு அவரது தாக்கம் இருக்கிறது. இப்போது உள்ள இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுத்துக்கொண்டிருக்கிறார் இளையராஜா.

Journalist Bismi Talks about ilayaraaja And Rajini Issue Here are the details

செம பிஸி: இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் அவர் அடுத்ததாக விடுதலை 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நிச்சயமாக அவரது இசையில் அடுத்ததாக வரவிருக்கும் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாறும் தனுஷ் நடிப்பில் பயோபிக்காக மாறவிருக்கிறது. படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

சர்ச்சை: இளையராஜா புகழின் உச்சியில் இருப்பவர்தான். ஆனால் அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழும். இளையராஜா சக மனிதரை மதிப்பதே இல்லை; அவருக்கு தலைக்கனம் அதிகம் என்று பலர் பேசுவார்கள். அதேசமயம் அது தலைக்கனம் இல்லை என்பது ராஜாவை புரிந்துகொண்டவர்களுக்கு தெரியும் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாகவே இளையராஜா மீதான விமர்சனம் பலரிடம் அதிகரித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

என்ன ஆனது: அதாவது வைரமுத்து ஒரு மேடையில் பாடலுக்கு மொழி முக்கியமா, இசை முக்கியமா என்று பேசியதை அடுத்து கங்கை அமரன் எதிர்வினையாற்றினார். அந்த விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்தபோதே, ரஜினி நடிக்கவிருக்கும் கூலி படத்தில் தன்னுடைய இசையை (தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா பாடல்) தன்னை கேட்காமல் பயன்படுத்திவிட்டார்கள் எனவே ராயல்டி வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனை வைத்து இளையராஜாவை பலரும் கடுமையாக சாடுகிறார்கள்.

பிஸ்மி பேட்டி: இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "தன்னுடைய நண்பர் ரஜினிகாந்த் நடிக்கும் படம்தான் கூலி. படம் வெளியான பிறகு இசை குறித்து க்ளைம் செய்துகொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு இளையராஜா இல்லை. இளையராஜாவை ரஜினிகாந்த் சாமி என்று அழைத்து கடவுளாக நினைத்து பழகினார். ஆனால் ரஜினிகாந்த் படத்துக்குத்தான் இளையராஜா இதனை செய்திருக்கிறார். ஒருகாலத்தில் இளையராஜா அசிங்கப்படுத்தியதை சகித்துக்கொண்டுதான் பலர் அவர் பின்னால் நின்றார்கள். அதில் ஒருவர்தான் ரஜினிகாந்த்.

ரஜினி மீது கோபம்: இளையராஜா படுத்திய அவமானத்தை பொறுத்துக்கொண்டவர்கள் மத்தியில் கே.பாலசந்தரும், மணிரத்னமும்தான் அதனை கண்டிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்கள். ரோஜா ஹிட்டான பிறகு ரஜினி, கமல் என எல்லோருமே ரஹ்மான் பின்னால் சென்றுவிட்டார்கள். இதனால் இளையராஜாவுக்கு மறைமுகமாக ரஜினி உள்ளிட்டோர் மீது கோபம். அதனைத்தான் இப்படி காட்டிவருகிறார்” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X