Thug Life - தக் லைஃப் படத்தில் சாதி எங்கே தேவைப்படுது?.. இதெல்லாம் பிற்போக்குத்தனம்.. பிஸ்மி விளாசல்

சென்னை: Thug Life (தக் லைஃப்) கமல் ஹாசன் நடித்துவரும் தக் லைஃப் படம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார்.

கமல் ஹாசன் அரசியல் வாசத்துக்கு பிறகு மீண்டும் கலை வாசம் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் அதில் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, ஹெச்.வினோத் இயக்கும் படம், மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது.

Journalist Bismi Talks about Kamal Haasans Thug Life Movie

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் படத்தை கொடுத்து பெரும் அடையாளமாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ரங்கராய சக்திவேல் நாயக்கன்: அதன்படி படத்தின் இன்ட்ரோ வீடியோ நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. அதில் வெட்டவெளியில் உடல் முழுவதும் துணியை சுற்றிக்கொண்டு நிற்கும் கமல் ஹாசன், என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. காயல்பட்டினக்காரன் என கூறுவது போன்றும் அவரை எதிரிகள் தாக்க வரும்போது அதற்கு பதில் தாக்குதல் நடத்தும்படியும் காட்சிகள் இருந்தன.படத்துக்கு தக் லைஃப் (Thug Life) என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

எதிர்ப்பு: வீடியோவில் கமல் ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று கமல் சொன்னதற்கு எதற்காக சாதி பெயரை தாங்கி வரும் ஒரு பெயரை கதாபாத்திரத்துக்கு வைக்க வேண்டும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில், “சாதியை நிஜ வாழ்க்கையிலும் சரி கலை படைப்பிலும் சரி பின்பற்றுவது ஒரு பிற்போக்குத்தனம்தான்.

தக் லைஃப் படத்தில் எதற்காக சக்திவேல் நாயக்கன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எங்கும் தேவைப்படுகிறதா என்றும் தெரியவில்லை. படம் ரிலீஸான பிறகு அந்த சமூகத்தினர் என்ன சொல்வார்கள் என்றும் தெரியவில்லை. அதேசமயம் நாம் இப்போது பார்த்திருப்பது சில நிமிடங்கள் கொண்ட வீடியோ மட்டும்தான். ஒருவேளை படம் வெளியாகி அந்தப் படத்தில் வேறு ஒரு விஷயம் கன்வே செய்யப்பட்டிருந்தால் நாம் இப்போது பேசியதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே படம் வெளியான பிறகு பேசுவதுதான் அர்த்தம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X