விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தனுஷை மிரட்டினார்கள்..கொளுத்திப்போட்ட பிஸ்மி.. என்னவெல்லாம் ஆகுமோ?

சென்னை: கங்குவா படத்தை பலரும் விமர்சித்துக்கொண்டிருந்த சூழலில் நடிகை நயன்தாரா நேற்று தனுஷை பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதனையடுத்து பலரும் கங்குவாவை விட்டுவிட்டு நயன்தாரா - தனுஷ் விவகாரத்தை பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மூன்று நொடி வீடியோக்காக பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டதெல்லாம் தவறு என்று ஒருதரப்பினர் சொல்ல; மறுதரப்பினரோ தனுஷ் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

சூர்யா நடித்த கங்குவா படத்தை சமூக வலைதளங்களில் பலரும் ரோஸ்ட் செய்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் நேற்று நடிகை நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “பல தவறான விசயங்களை சரி செய்வதற்காகவே வெளிப்படையான இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். உங்கள் தந்தை திரு கஸ்தூரி ராஜா அவர்கள் உறுதுணையோடு, சிறந்த இயக்குநரான உங்கள் அண்ணன் திரு. K.செல்வராகவனின் இயக்கத்தில் திரைத்துறைக்கு வந்து பிரபல நடிகராக மாறியிருக்கும் நீங்கள் நிச்சயம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன். நேர்மறையான எனது பயணத்தை என் மீது அன்பு செலுத்தும் எனது ரசிகர்களும், திரைத்துறையினரும் நன்றாகவே அறிவார்கள்.

dhanush nayanthara vignesh shivan


'Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் அந்த ஆர்வத்தை பூர்த்தி செய்யவே இதில் பணியாற்றியிருக்கும் ஒவ்வொருவரும் பல்வேறு தடைகளையும் மீறி, அனைத்துப் பணிகளையும் முடித்து தற்போது வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம்

உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான் திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

'Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும், தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு ₹10,00,00,000 (பத்து கோடி) நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.

எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அதற்கான அனுமதிக்காக வேறு பல தயாரிப்பாளர்களை அணுகியபோது பேரன்போடு அனுமதித்தார்கள். அப்போதுதான், உங்களில் இருந்து எவ்வளவு மாறுபட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களை கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

சட்டப்பூர்வமான உங்களது நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள நாங்களும் தயராகவே இருக்கிறோம். 'நானும் ரௌடிதான்' படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்காததற்கான Copywright காரணங்களை நீங்கள் நீதிமன்றத்தில் விளக்கிக் கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் தெளிவுப்படுத்த வேண்டிய சில விசயங்கள் இருக்கின்றன” என பல விஷயங்களை பேசியிருதார்.

பிஸ்மி பேட்டி: இவ்விவகாரத்தில் சிலர் தனுஷுக்கும், சிலர் நயன்தாராவுக்கும் ஆதரவாக இருக்கிறார்கள். இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி இந்த விஷயம் குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், “இந்த விவகாரத்தில் தனுஷ் மீது தவறு இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும் என்றால் தனுஷிடம் முறைப்படி அணுகியிருக்க வேண்டும். ஆனால் விக்னேஷ் சிவனோ தனுஷின் மேனேஜருக்கு ஃபோன் செய்து அவருக்கு தெரியாமல் சான்றிதழை கேட்டார். அவர் மறுத்துவிட்டார். ஏற்கனவே 4 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட நானும் ரௌடிதான் படத்தை 17 கோடி ரூபாய்க்கு இழுத்துவிட்டதால் விக்னேஷ் சிவனுடன் தனுஷ் பேசாமல் இருந்தார்.

மிரட்டினார்கள்: இப்போதோ தனக்கே தெரியாமல் சான்றிதழை வாங்க முயற்சி செய்த விஷயம் தனுஷின் காதுகளுக்கு சென்று அவரை மேலும் கடுப்பேற்றிவிட்டது. என்னால் தர முடியாது என்று சொல்லிவிட்டார். அதனையடுத்து உயர் அதிகாரிகள் எல்லாம் விக்னேஷ் சிவனுக்காக பேசினார்கள். அப்போது தனுஷ் தன்னால் முடியாது என்று கூறிவிட்டார். ஒருகட்டத்தில் அவரிடம் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து எங்களுக்கு அந்த சான்றிதழை தராவிட்டால் நாங்கள் உண்ணாவிரதம் இருந்து உங்கள் இமேஜை டேமேஜ் செய்வோம் என்று மிரட்டினார்கள். அது தனுஷை மேலும் கோபப்படுத்தியது. மேலும் உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்க என்று தனுஷ் அவர்களிடம் சொல்லிவிட்டார்”

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X