Sivakarthikeyan - இமானின் குற்றச்சாட்டு..சிவகார்த்திகேயன் குடும்பத்தில் என்ன நடக்கிறது?..பிஸ்மி சொன்ன சீக்ரெட்

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) இமான் வைத்த குற்றச்சாட்டை பொய் என்று சிவகார்த்திகேயன் நிரூபிக்க முயல்கிறார் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

Journalist Bismi Talks about Sivakarthikeyan And D.Imman Controversy

இப்படி பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. மது, புகை போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுக்கு இருந்த க்ளீன் பாய் இமேஜை டேமேஜ் செய்தார்.

துரோகம்: அவர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவருடன் இந்த ஜென்மத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றமாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அந்த துரோகத்தை வெளியே சொல்லமாட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்னவாக இருக்கும் என்று பலரும் தங்களது யூகங்களை சொல்ல ஆரம்பித்தனர். முக்கியமாக இமானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு சிவாதான் காரணம் என்ற பேச்சும் பலமாக அடிபட்டது.

புகைப்படம்: இமான் வைத்த குற்றச்சாட்டுக்கு சிவகார்த்திகேயன் இதுவரை எந்த பதிலும் கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் அந்தப் புகைப்படம் வெளியிடப்பட்டது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

பிஸ்மி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படத்தின் மூலம் இமான் வைத்த குற்றச்சாட்டு பொய் அதில் உண்மையில்லை. நான் எனது குடும்பத்துடன் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் என்பதை உணர்த்த முயல்கிறார். ஆனால் இமான் வைத்த குற்றச்சாட்டில் பெரும் அளவு உண்மை இருக்கிறது.

பொதுமக்களிடம் தன்னுடைய பெயர் கெட்டுப்போய்விடக்கூடாது என்பதில் சிவகார்த்திகேயன் தெளிவாக இருக்கிறார். ஒரு விஷயம் நடக்கிறது என்றால் அதற்கான எதிர்வினை சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தில் கண்டிப்பாக இருக்கும். அது சிவகார்த்திகேயனின் குடும்பத்தில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. எனவே இமான் வைத்த குற்றச்சாட்டால் என்னுடைய குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதைதான் அவர் சொல்ல முயல்கிறார். ஒரு வீட்டில் பிரச்னை ஏற்பட்டால் 24 மணி நேரமும் அந்த பிரச்னை நீளாது.

ஒருகட்டத்தில் சமாதானம் ஆவார்கள். அப்படி சண்டை போட்டுவிட்டு சமாதானம் ஆன பிறகுகூட சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் அந்தப் புகைப்படத்தை எடுத்திருக்கலாம். எனவே நாங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருக்கிறோம் என்று அந்த புகைப்படத்தை வைத்து சிவகார்த்திகேயன் நிரூபிக்க முயல்வது கண்டிப்பாக ஒரு நாடகம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X