அமரன் வெற்றி சிவகார்த்திகேயனுக்கு தலைக்கனத்தை ஏற்றிவிட்டதா?.. பிரபலம் என்ன இப்படி சொல்றாரு

சென்னை: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதுவும் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துவிட்டது. மேலும் வசூலிலும் 350 கோடி ரூபாயை அது தொட்டிருக்கிறது. இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் உயர்ந்திருக்கிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் இப்போது டாப் 3 ஹீரோக்களில் ஒருவராக வந்துவிட்டார். விஜய் வேறு சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழலில் தான் நடித்த GOAT படத்தில் சிவாவிடம் துப்பாக்கியை கொடுத்து பேசிய வசனம் வேறு எஸ்கே மீது கூடுதல் கவனத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்கு தகுந்தாற்போல் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. 350 கோடி ரூபாய் வசூல் செய்த அந்தப் படம் வணிக ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

sivakarthikeyan amaran puranaanooru

சம்பள உயர்வு: அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அதாவது இதுவரை 25 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கிவந்ததாக கூறப்படும் அவர்; அடுத்த படங்களுக்கு 60 கோடி ரூபாய்வரை சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ஒருதரப்பினர் வாயை பிளந்திருக்கின்றனர். அதேசமயம் சிவகார்த்திகேயனின் உழைப்புக்கும், அவரது வெற்றிக்கும் 60 கோடி ரூபாய் என்பது நியாயம்தான் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

அடுத்த படங்கள்: அமரன் படத்தை முடித்திருக்கும் அவர் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். சில வாரங்களுக்கு முன்புகூட சென்னையில் ஒரு மேம்பாலத்தில் அந்தப் படத்தின் ஒரு காட்சியில் சிவா நடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. அந்தப் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். புறநானூறு ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.

பிரச்னையா?: புறநானூறு படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக இருக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் அறிவிப்புக்காக ஒரு ஷூட்டிங்கை சுதா சமீபத்தில் நடத்தியதாகவும்; அப்போது சிவகார்த்திகேயன் தாடியுடன் இருந்ததால் இயக்குநர் கடுப்பாகி கத்திவிட்டார்; சிவகார்த்திகேயனும் கோபப்பட்டு ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கிளம்பிவிட்டார் என்று தகவல்கள் வட்டமடித்தன. சூழல் இப்படி இருக்க இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார்.

பிஸ்மி பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சிவகார்த்திகேயன் புறநானூறு படத்தை கமிட் செய்தது அமரன் படத்துக்கு முன்பு. இப்போது அமரன் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இதனால் சுதா கொங்கரா படத்தில் நாம் நடிக்க வேண்டுமா என்ற எண்ணம் அவருக்கு உருவாகியிருக்கலாம். மேலும் நாம் இனி ஷங்கர், மணிரத்னம் படங்களில்தானே நடிக்க வேண்டும் என்றும் அவர் நினைக்கலாம். அதேசமயம் அமரனுக்கு முன்பு சுதா கொங்கரா சிவகார்த்திகேயனுக்கு தேவைப்பட்டார். இப்போதைக்கு தேவைப்படவில்லை" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பிஸ்மி பேசுவதை பார்த்தால் அமரன் வெற்றியால் சிவகார்த்திகேயனுக்கு தலைக்கனம் ஏறிவிட்டதோ என்று தோன்றுவதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X