விஜய்யும் திரிஷாவும் ஒரே விமானத்தில் போனால் என்ன தவறு?.. விளாசிய பிரபலம்
சென்னை: கோலிவுட்டின் ரீல் ஜோடிகளில் ரசிகர்களின் மோஸ்ட் ஃபேவரைட் என்றால் அது விஜய்யும், திரிஷாவும்தான். இருவரும் முதன்முறையாக கில்லி திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு திருப்பாசி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களில் நடித்தனர். மேலும் GOAT படத்தில் விஜய்யுடன் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார். சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேர் பற்றியும் கடந்த சில காலமாகவே வதந்திகள் றெக்கை கட்டி பறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் எத்தனையோ ரீல் ஜோடிகள் ரசிகர்களின் ஃபேவரைட் ஆகியிருக்கிறார்கள். கமல் - ஸ்ரீதேவி, ரஜினி - ஸ்ரீதேவி என்ற அந்த லிஸ்ட் செல்லும். அந்த லிஸ்ட்டில் இருப்பவர்கள்தான் விஜய்யும் திரிஷாவும். தரணி இயக்கிய கில்லி திரைப்படத்தில்தான் இரண்டு பேரும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் அதில் இரண்டு பேருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அதனையடுத்து தொடர்ந்து ஒன்றாக நடித்தார்கள்.

வரிசையாக ஜோடி சேர்ந்த இருவர்: அதன்படி திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் வரிசையாக சேர்ந்து நடித்தார்கள். இவற்றில் திருப்பாச்சியை தவிர்த்து மற்ற இரண்டு படங்களுமே மோசமான தோல்வியை சந்தித்தன. இருந்தாலும் அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்களில் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி மேற்கொண்டு பலரையும் கவர்ந்தது. அப்படிப்பட்ட சூழலில்தான் இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் எழ ஆரம்பித்தன. மேலும் விஜய் திரிஷாவுக்கு காஸ்ட்லி கிஃப்ட்டுகளை கொடுத்தார் என்றும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.
பல வருடங்களுக்கு பிறகு: அதனையடுத்து இரண்டு பேரும் சேர்ந்து நடிப்பதை தவிர்த்துவந்தனர். சூழல் இப்படி இருக்க பல வருடங்களுக்கு விஜய்யுடன் லியோ படத்தில் சேர்ந்து நடித்தார் திரிஷா. அதில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார். அந்தப் படத்தை முடித்துவிட்டு விஜய் நடித்த GOAT படத்தில் மட்ட என்ற பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருந்தார் திரிஷா. இதன் காரணமாக மீண்டும் அவர்கள் பற்றி வதந்திகளும், கிசுகிசுக்களும் பறக்க ஆரம்பித்தன. முக்கியமாக திரிஷாவின் ஃப்ளாட்டிலேயே விஜய்யும் ஒரு வீடு வாங்கியிருப்பதாக எல்லாம் பேசப்பட்டது.
ஒரே விமானத்தில்: அதுமட்டுமின்றி விஜய்யும் திரிஷாவும் மீண்டும் பழக ஆரம்பித்ததால்தான் விஜய்யின் மனைவி சங்கீதா கோபித்துக்கொண்டு லண்டனுக்கு சென்றுவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. ஆனால் அதிலெல்லாம் உண்மை இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. நிலவரம் இவ்வாறு இருக்க சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்துக்கு விஜய், திரிஷா தனி விமானத்தில் ஒன்றாக சென்றனர்.
விளாசிய பிஸ்மி: அவர்களின் இந்த நடவடிக்கை வதந்திக்கு மேலும் தீனி போட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேருமே அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி இந்த விவகாரம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "திரிஷாவும் விஜய்யும் கில்லி பட சமயத்திலிருந்தே நல்ல நண்பர்கள். அது எனக்கே நன்றாக தெரியும். விஜய்யும் கீர்த்தி சுரேஷும் நண்பர்கள்; திரிஷாவும் கீர்த்தி சுரேஷும் நண்பர்கள். விஜய் மற்றும் திரிஷாவிடம் வசதி இருக்கிறது. அதன் காரணமாக கீர்த்தியின் திருமணத்துக்கு ஒன்றாக தனி விமானத்தில் சென்றிருக்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர்களை இணைத்து பேசுவதெல்லாம் கேவலத்தின் உச்சம்" என்றார்.


Click it and Unblock the Notifications











