யோகிபாபுவுக்கு இதெல்லாம்தான் கடுப்பு.. பஞ்சாயத்தை விடாத பத்திரிகையாளர் பிஸ்மி.. என்ன நடக்குது?
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. அவரது நடிப்பில் கடைசியாக சட்னி சாம்பார் என்ற வெப் சீரிஸ் வெளியானது.ராதாமோகன் இயக்கத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான அந்த சீரிஸ்க்கு ஓரளவு நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. மேலும் சிம்புதேவன் இயக்கத்தில் போட் படத்திலும் நடித்திருந்தார். அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இதற்கிடையே வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோருடன் யோகிபாபுவுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர்களில் யோகிபாபுதான் டாப்பில் இருக்கிறார். அவரது டைமிங்கும், நடிப்பும் பலரையும் கவர்ந்திருக்கிறது. காமெடி நடிகராக மட்டுமில்லாமல் கதையின் நாயகனாகவும் அவர் நடித்துவருகிறார். அப்படி அவர் கடைசியாக நடித்த போட் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்த சட்னி சாம்பார் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பெற்றது.

புது பிரச்னை: யோகிபாபு நடிக்க வந்ததிலிருந்து அவரை சுற்றி பெரிதாக சர்ச்சைகள் எதுவும் எழுந்ததில்லை. ஆனால் கடந்த சில காலமாகவே அவரை சுற்றி சர்ச்சைகளும், விவாதங்களும் எழுந்திருக்கின்றன. முக்கியமாக கால்ஷீட் கொடுத்தால் சொன்ன தேதிக்கு நடித்து கொடுக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. சமீபத்தில்கூட வலைப்பேச்சு பிஸ்மி, அந்தணன் ஆகியோருக்கும் யோகிபாபுவுக்கும் இடையே பிரச்னை வெடித்தது. அவர்கள் பணம் கேட்டதாக யோகிபாபு சொல்ல; தாங்கள் கேட்கவே இல்லை என்று அவர்கள் சொல்ல; இடையில் யோகிபாபுவால் எல்லாமே போச்சு என்று லோக்கல் சரக்கு பட தயாரிப்பாளர் பேச என இந்தப் பஞ்சாயத்து நீண்டுகொண்டே செல்கிறது.
பிஸ்மி பேட்டி: மேலும் அஜித் தன்னை தொடக்கூடாது என கூறியதாக யோகிபாபு எங்களிடம் சொன்னார் என்றும் வலைப்பேச்சினர் கூறினர். இந்நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி யோகிபாபு குறித்து தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "யோகிபாபுவுக்கும் எங்களுக்கும் இடையே எந்தவிதமான தனிப்பட்ட பிரச்னை என்று எதுவுமே கிடையாது. அவரைப் பற்றிய உண்மையை நாங்கள் சொல்வதுதான் பிரச்னையாக இருக்கிறது. யார் மீதும் எங்களுக்கு தனிப்பட்ட வன்மமோ, அபிப்ராயமோ கிடையாது.
இதுதான் எங்கள் வேலை: நல்லது செய்தால் கொண்டாடுவோம். தவறு செய்தால் சுட்டிக்காட்டுவோம். யோகிபாபு விவகாரத்தில் அவர் தயாரிப்பாளர்களுக்கு நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அவரை வைத்து படமெடுத்த பலர் அவர்கள் பட்ட அவஸ்தையை எங்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனை நாங்கள் செய்தியாக்குகிறோம். அவரது திருமணம் பற்றிகூட ஒரு எக்ஸ்க்ளூசிவ் தகவலைக்கூட செய்தியாக்கியிருக்கிறோம்.
கடுப்பாகிவிட்டார்: இப்போது நடந்துகொண்டிருக்கும் பிரச்னை குறித்த செய்தி வெளியானதும் யோகி உண்மையில் கடுப்பாகிவிட்டார். அதாவது அவர் ஒரு படத்தில் கமிட்டாவார். படம் ரிலீஸாகும்போது மீண்டும் கொஞ்சம் பணம் கேட்டு பிரச்னை செய்வார். தயாரிப்பாளர் தரப்பில் மறுத்துவிட்டால் நான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கவில்லை. கேமியோதான் செய்திருக்கிறேன் எனது பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்வார். ஆனால் நாங்களோ இல்லை யோகிபாபு இதில் ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார். அவர் வாங்கிய சம்பளம் இவ்வளவு என்று கூறினோம். அதுதான் அவருக்கு எங்கள் மீது சரியான கடுப்பு வர காரணம்.
யோகிபாபுவை தவிர்த்துவிட்டோம்: இந்தப் பிரச்னை வந்த பிறகு யோகிபாபுவை சந்திப்பதை நாங்கள் தவிர்த்துவிட்டோம். முன்பெல்லாம் நாங்களும், யோகிபாபுவும் பேசிக்கொள்ளத்தான் செய்தோம். ஆனால் அவரைப் பற்றிய நெகட்டிவ் செய்திகள் போட ஆரம்பித்த பிறகு எங்களுக்குள்ளான தொடர்புகள் குறைய ஆரம்பித்துவிட்டன” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அய்யய்யோ இப்போதைக்கு இந்தப் பஞ்சாயத்து முடியாதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











