ஸ்ரீகாந்திற்கு கட்டம் கட்டியதே எஸ்ஏசி தான்.. கசமுச கதையால் உள்ளதும் போச்சு.. சேகுவேரா பளீச்!

சென்னை: ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகமான நடிகர் ஸ்ரீகாந்த், பார்த்திபன் கனவு, போஸ், நண்பன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து பிரபலமானார். சில ஆண்டுகளாக ஸ்ரீகாந்திற்கு வாய்ப்புகளே இல்லாததால், அவர் சினிமாவில் தென்படாமலே இருக்கிறார். தற்போது ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ள, தினசரி என்ற படத்திலிருந்து வீடியோ பாடல் ஒன்று வெளியாகி, ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசை அமைத்திருக்கிறார். இதில், ஹீரோயினாக அந்த படத்தின் தயாரிப்பாளரே நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து, கடந்த சில நாட்களுக்கு முன், தேடி தேடி நான் கண்டேன் என்ற பாடல் வெளியானது. அந்த பாடலைப்பார்த்த இணையவாசிகள், ரோஜா கூட்டம், பார்த்திபன் கனவு என எப்பேர்பட்ட படத்தில் நடித்த ஸ்ரீகாந்திற்கா இந்த நிலையை என்று கடுமையாக அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

srikanth che guevara interview

சேகுவேரா பேட்டி: இது குறித்து youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பத்திரிக்கையாளர் சேகுவேரா, ஒரு கால கட்டத்தில் நல்ல பீக்கில் இருந்த நடிகர் தான் ஸ்ரீகாந்த். இன்று விஜய் இருக்கும் இடத்தில் ஸ்ரீகாந்த் இருந்திருக்க வேண்டும். ஸ்ரீகாந்த் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் கட்டம் கட்டி, விஜய்க்கு சமமாக வந்து விடக்கூடாது என்பதற்காக பல விஷயங்களை செய்தார். அதற்கு காரணம் தமிழ் சினிமாவில் அழகான நடிகர்களாக இருந்தவர் ஒன்று பிரசாந்த் அடுத்து ஸ்ரீகாந்த் தான். இதில் பிரசாந்த் அவர்கள் குடும்பப் பிரச்சனை காரணமாக அவரின் மார்க்கெட் வீழ்ந்து விட்டது. அடுத்தபடியாக இருந்தவர் ஸ்ரீகாந்த் தான். இதனால், ஸ்ரீகாந்தை டம்மியாக்கும் திரைமறைவு வேலைகள் எல்லாம் நடந்தது.

விவகாரமான படத்தில்: இதையடுத்து, ஒரு முரண்பட்ட உயிர் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அண்ணன் இறந்து விட அண்ணி, மைத்துனர் மீது ஆசைப்படுவது போல் அந்த படத்தின் கதை இருந்தது. அதில், அண்ணி கதாபாத்திரத்தில் சங்கீதா நடித்து இருந்தார். அந்த படத்தில் ஸ்ரீகாந்துக்கு நல்ல ரோல் தான், ஆனால் அந்த படத்திற்கு பிறகு காதல், கல்யாணம் என இயல்பாகவே ஸ்ரீகாந்த்தின் மார்க்கெட் குறைந்துவிட்டது. பிரசாந்த் விட்ட, அந்த இடத்தை ஸ்ரீகாந்த் நிரப்பி இருக்க வேண்டும். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. அதன்பிறகு அவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு எந்த திரைப்படமும் அமையாததால் தற்போது இது போன்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று பத்திரிக்கையாளர் சேகுவேரா அந்த பேட்டியில் பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X