ரகசிய மனைவி.. சிவாஜி பேரனுக்கு நடந்த கொடுமை.. சேகுவேரா சொன்ன அதிர்ச்சி தகவல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்த சிவகுமார் சிவாஜியின் பேரன் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் மிகபெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது. அதாவது சிவாஜியின் மகன் ராம்குமாரின் இன்னொரு மனைவிக்கு பிறந்தவர் தான் சிவகுமார். இவர் நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரி மீனம்மாவுடன் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் இதுவரையிலும் எந்த இடத்திலும் சிவகுமார் தன்னுடைய மகன் என குறிப்பிட்டது கிடையாது.
இதுகுறித்து பேசி உள்ள, பத்திரிக்கையாளர் சேகுவேரா, நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரே மனைவி உடன் வெளிப்படையாக வாழ்ந்து வாழ்க்கை நடத்தியவர். அவர் நடிகை பத்மினியுடன் கிசு கிசுவில் சிக்கிய போது கூட பத்மினி வெளிப்படையாகவே நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என்று கூறியிருந்தார். அதே போல, பிரபு அவர்கள் சர்ச்சையில் சிக்கிய போதும், சிவாஜி அவர்கள் மொத்த குடும்பத்தையும் அழைத்து பேசி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பெண்ணை வஞ்சிப்பது தவறு: ஆனால் அவரின் மகன் மிகவும் நல்லவன் என்கிற போர்வையில் இருக்கும் சிவாஜியின் மகன், ராம்குமார் ஸ்ரீபிரியா அவர்களின் சகோதரி உடன் பழக்கம் ஏற்பட்டு ஒருமகனும் இருக்கிறான். தற்போது அது இணையத்தில் செய்தியாகக்கூட வந்துவிட்டது. அப்படி இருக்கும் போது பொதுவெளியில் சிவகுமார் என் மகன் என்று சொல்வதில் என்ன நடந்து விடப்போகிறது. ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகும், அந்த பெண்ணை வஞ்சிப்பதே மிகப்பெரிய தவறு, அது மட்டுமில்லாமல் குழந்தையை வஞ்சிப்பது மிகப்பெரிய தவறு. அந்த சமுதாயத்தில் அந்த பையன் எப்படி வாழ்க்கை நடத்துவான். சொத்து கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், சிவக்குமார் என் வாரிசு தான் என்று அறிவிப்பதில் என்ன நடந்து விடப்போகிறது.
பரிதாபமாக இருக்கிறது: சிவாஜி கணேசன் என்ற கம்பீரமான ஒரு குடும்பத்தில் பிறந்துவிட்டு இது போன்று, ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்வது தவறான விஷயம். பணம் இருக்கிறது, அதிகாரம் இருக்கிறது, பெரிய குடும்பத்தின் மகன் என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாமா? அந்த சிவகுமாரை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக தான் இருக்கிறது. இதை நான் எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடனும் பேசவில்லை. இதனால், ராம்குமாரின் பெயர் கெடவில்லை சிவாஜியின் பெயர் தான் கெடுகிறது.
இதுதான் காரணம்: இந்த விஷயத்தை மறைப்பதற்கு முக்கிய காரணமே சொத்துதான். என்றாவது ஒருநாள் சொத்துக்கு பங்கு வந்துவிடப் போகிறார் என்பதற்காக சிவகுமாரை தன் வாரிசு இல்லை என்று மறைத்து வைக்க பார்க்கிறார். ஆனால், இந்த உண்மையை எத்தனை நாள் மறைத்து வைக்க முடியும், இப்போது இந்த விஷயம் இணையத்தின் வழியாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. பிரபு சினிமாவில் நடித்து சம்பாதித்து சொத்தை சேர்த்து வைத்துள்ளார். ஆனால், ராம்குமார் அவர்கள் எந்த ஒரு நிறுவனத்தையோ எந்தவித வேலையும் செய்யாமல் தனது அப்பா சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்திலே தான் வாழ்ந்து வருகிறார் அப்படி இருக்கும்போது, சிவக்குமாரை தன் வாரிசு என்று கூறிவிட்டால், சொத்தில் பங்குக்கு வந்து விடுவார் என்பதற்காக அந்த விஷயத்தை மறைக்கிறார். சொத்தை கொடுங்கள், கொடுக்காமல் கூட போங்க, ஆனால், அந்த பையனுக்கு என் வாரிசு தான் என்று அங்கீகாரத்தையாவது கொடுங்கள் என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











