உடலை காட்டி கவர்ச்சி ஆட்டம்.. ஜெயிலர் படம் தமன்னாவால் தான் ஓடுச்சா.. விளாசிய பிரபலம்!
சென்னை : சினிமா தற்போது அழிந்துக்கொண்டு இருக்கிறது, உடலை காட்டி கவர்ச்சி ஆட்டம் போட்டால் போதும், அதன் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம் என்கிற மனநிலைக்கு நடிகைகள் வந்துவிட்டனர். இது சினிமா உலகிற்கு கேடு என பத்திரிக்கையாளர் சே குவேரா பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
அதில், மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் புயலை கிளப்பி இருக்கு. இப்போது பல நடிகைகள் பல நடிகர்கள் மீது பாலியல் ரீதியாக புகார் கொடுத்ததாக கூறி வருகிறார்கள். இதுபற்றி நடிகர்கள் மட்டுமில்லாமல் தொழில்நுட்ப கலைஞர்களிடம் கேட்டால், அவர்கள், நடிகைகள் பலர் கவர்ச்சி என்ற பெயரில் ஆடைகளை குறைத்துக்கொண்டு நடிக்கிறார்கள். இதுகவர்ச்சி நடனம் என்பதை தாண்டி தற்போது அது ஆபாச நடனமாகிவிட்டது. இதுவே தவறுக்கு வழி வகுக்கிறது என்கின்றனர்.

கவர்ச்சி காட்டினால் போதும்: முன்பு கவர்ச்சி நடத்திற்கு என்றே சில்க் ஸ்மிதா, அனுராதா போன்ற நடிகைகள் இருந்தார்கள். ஆனால், இவர்களின் வேலைகளை எல்லாம் இப்போது கதாநாயகிகளே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது இருக்கும் கதாநாயகிகள் எல்லாம், நடிக்க வேண்டியது இல்லை என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். நயன்தாரா, சமந்தா, தமன்னா போன்ற நடிகைகள் இருக்கிறார்கள். அதிலும் சில நடிகைகள் விதிவிலக்காக இருக்கிறார்கள்.
தமன்னா கவர்ச்சி டான்ஸ்: ஆனால், இப்போது இயக்குநர்கள் கதையை நம்பி படம் எடுப்பதில்லை, நடிகையை நம்பித்தான் படம் எடுக்கிறார்கள். அவர்களின் உடலை அப்பட்டமாக கட்டிவிட்டால் படம் ஓடிவிடும் என்று நினைக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடுன டான்ஸ், வரம்பு மீறி இருக்கு, ஜெயிலர் படம் தமன்னா ஆடுன டான்ஸில் தான் ஓடுச்சா, இல்லனா ஓடி இருக்காதா. தமன்னா கவர்ச்சி என்ற பெயரில், ஆபாசத்தை காட்டுகிறார்.
அது பேய் படமா? அதே போல சுந்தர் சி அரண்மனை படத்தை பாகம் பாகமாக எடுத்து வருகிறார். அதை பேய் படம் என்று சொல்லுகிறார். அது பேய் படமா, தமன்னாவின் உடையை கிழித்துவிட்டு, அரைகுறையாக ஆடவிட்டுள்ளார். அது பேய் படம் இல்லை பிட்டு படம். இவரை அடுத்து ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தை பாகம் பாகமாக எடுத்து வருகிறார். முதல் இரண்டு பாகத்தை பார்க்கலாம் நன்றாக இருந்தது. அடுத்து வந்த பாகம் எல்லாம் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இவர்களுக்கு சினிமாவை வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் எல்லாம் இல்லை, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டும் தான் நோக்கம் என்று பத்திரிக்கையாளர் சே குவாரா பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











