நயன்தாராவுக்கு தனுஷ் அந்த டார்ச்சர் கூட கொடுத்திருக்கலாம்! சேகுவேராவின் கருத்தால் ரசிகர்கள் ஆத்திரம்
சென்னை: தமிழ் சினிமா உலகில் கடந்த 14ஆம் தேதியில் இருந்து வறுத்து எடுக்கப்பட்ட விஷயம் என்றால், அது சூர்யாவின் கங்குவா பற்றிய பேச்சுகள்தான். இன்னும் சொல்லப்போனால், கங்குவாவை பங்கம் செய்தார்கள் எனலாம். இப்படியான நிலையில் கங்குவாவை பெரும் விமர்சனங்களில் இருந்து நயன்தாரா காப்பாற்றியுள்ளார் எனலாம்.
தற்போது தமிழ் சினிமா உலகம் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் மிகவும் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. இப்படியான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, பத்திரிகையாளர் சேகுவேரா ஜெய்சங்கர் கூறியுள்ள கருத்து வேகமாக பரவி வருகின்றது.

நடிகை நயன் - விக்கி திருமண டாக்குமெண்ட்ரி நாளை அதாவது நவம்பர் 18ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இவர்களுக்கு திருமணம் நடைபெற்று கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் டாக்குமெண்டரி நாளைதான் ரிலீஸ் ஆகவுள்ளது. இதில் நானும் ரவுடிதான் படத்தில் இருந்து 3 நொடிக் காட்சிகள் இடம் பெற்றதற்கு ரூபாய் 10 கோடி நஷ்டஈடு கேட்டி தனுஷ் தரப்பில் கூறப்பட்டதாக நயன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் டாக்குமெண்டரியில் நானும் ரவுடிதான் படத்தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என எதையுமே, பயன்படுத்தக்கூடாது எனக் கூறியது மட்டும் இல்லாமல், வழக்கும் தொடுத்துள்ளார் தனுஷ்.

பாலியல் தொல்லை: இப்படியான நிலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுமட்டும் இல்லாமல், தனுஷ் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அதாவது சேகுவேரா கூறியதாவது, " நயன்தாராவின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் நேரடியாகவும் பல விஷயங்களை மறைமுகமாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனுஷ் ஒன்றும் உத்தமர் கிடையாது. யாருக்குத் தெரியும் நயன்தாராவுக்கு தனுஷ் பாலியல் தொல்லை கூட கொடுத்திருக்கலாம்.

உத்தமரா? : திருமணம் ஆகிவிட்டது என்பதற்காகவும் தனுஷ்க்கு இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டது என்பதற்காகவும், உத்தமராகவும், ஏகபத்தினி விரதம் இருக்கக்கூடியவரா என்ன? தனுஷ் மட்டும் இல்லை விஜய் போன்ற நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் நடிகைகள் அடிமைபோல் இருக்கவேண்டும் என நினைக்கின்றார்கள்.

நோக்கம்: தனுஷ் நயன் விஷயத்தைப் பொறுத்தவரையில், தனுஷ் ரூபாய் 10 கோடி கேட்கின்றார் என்றால் அது, அவருக்குள் இருக்கும் காழ்ப்புணர்வுதானே தவிர வேறு எதுவும் இல்லை. மேலும் தனுஷ் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கும் அனைவரும் தனக்குக் கீழ் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தனுஷ் ஏன் பணம் கேட்கவேண்டும், அவரிடம் இல்லாத பணமா? அப்படியானால் அவரது நோக்கம் பணம் இல்லை என்றும், பணத்திற்காக அவர் இப்படி நடந்துகொள்ளவில்லை என்றும் தெளிவாகத் தெரிகின்றது என சேகுவேரா ஜெய்சங்கர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். சேகுவேரா ஜெய்சங்கரின் இந்தப் பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் ஆத்திரத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











