வாயை மூடினாலே வசூல் வரும்.. கங்குவாவை காலி செய்வதே தயாரிப்பாளர் தான்.. சேகுவேரா பகீர் பேச்சு!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு என லீட் நடிகர்கள் இணைந்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் கதைக்களம் வரலாற்று பின்னணியில் மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இரு ஆண்டுகள் இந்தப் படத்திற்காக சூர்யா மெனக்கெட்டுள்ளார். படம் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில் சர்வதேச தரத்தில் இந்தப்படத்தை சிவா இயக்கியுள்ளதாகவும் படம் நெருப்பு போல இருக்கும் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். சுதா கொங்கராவின் சூரரை போற்று படத்தை தொடர்ந்து ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் என சூர்யாவின் வித்தியாசமான படங்கள் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டன. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து அவரது அடுத்தப்படம் கங்குவா வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீசாகவுள்ளது. அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கி மிகப்பெரிய கவனத்தை கோலிவுட்டில் ஏற்படுத்திய சிவா, தற்போது சூர்யாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். வழக்கத்திற்கு மாறாக இந்தப் படத்தில் வரலாற்று கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் சிவா.
கங்குவா படம்: படத்தில் பிரான்சிஸ், கங்குவன் என இருவேறு கேரக்டர்களில் மாஸ் காட்டியுள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் மிரட்டியுள்ளார். படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளன. ரிலீஸ் ட்ரெயிலரையும் நேற்றைய தினம் படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். படத்தின் பிரமோஷன்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே படக்குழுவினர் துவங்கிய நிலையில் மிகப்பெரிய அளவில் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஞானவேல் ராஜா பேச்சு: படத்தின் பிரமோஷன்களுக்காக பேசிவரும் சூர்யா, கங்குவா படம் எப்படி தனக்கு முக்கியம் என்பது குறித்து பேசி வருகிறார். அடுத்தடுத்து மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத், கொச்சி என பிரமோஷன்களில் ஈடுபட்ட சூர்யா தற்போது துபாயிலும் ரசிகர்களை சந்தித்து பேசினார். அடுத்தடுத்த பேட்டிகளில் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இதேபோல ஞானவேல் ராஜாவும் தன்னுடைய மிகப்பெரிய நம்பிக்கையை இந்தப் படத்திற்காக வெளிப்படுத்தி வருகிறார். படம் 2000 கோடி ரூபாய்களை வசூலிக்கும் என்று பேட்டியொன்றில் கூறிய ஞானவேல் ராஜா, ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தையும் வம்பிழுக்கும் வகையில் பேசியிருந்தார்.
சேகுவேரா கடுப்பு: இந்நிலையில் அவரது இந்த செயல்பாடுகள் குறித்து பத்திரிகையாளர் சேகுவேரா கடுப்பை வெளிப்படுத்தியுள்ளார். filmibeat tamilக்கு கொடுத்த பேட்டியொன்றில் பேசிய அவர், சூர்யா சிறப்பான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் ஆனால் ஞானவேல் ராஜாவின் பில்டப் கொஞ்சம் ஓவராகத்தான் இருப்பதாக தெரிவித்துள்ளார். படம் சிறப்பான வெற்றியை கொடுத்தால் சந்தோஷம்தான் என்று கூறியுள்ள சேகுவேரா, ஆனால் இவர்கள் கொடுக்கும் ஓவர் பில்டப்பால் படம் சொதப்பலாகிவிடுமோ என்ற பதட்டமும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவின் ஸ்டாண்டர்ட் மாறும் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பேச்சை குறைப்பது நல்லது: 1000 கோடி வசூல் குறித்து தான் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ள சேகுவேரா, கடந்த காலங்களில் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் தற்காலங்களில் 5000, 10000 திரையரங்குகளில் ஒரே நாளில் படங்கள் ரிலீசாவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் ஒரே நாளில அ திகமான வசூல் சாத்தியமே என்றும் கூறியுள்ளார். இதனிடையே ஞானவேல் ராஜா மற்ற ஸ்டார்களை தாக்கி பேசுவது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும என்றும் காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார். அவர் இப்படி பேசுவதால் படம் குறித்த நெகட்டிவ் சந்தேகங்கள் வருவதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் பேச்சை குறைப்பதே படத்திற்கு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











