உடலுறவு பற்றி பேசியது மறந்துபோச்சா.. குஷ்பு கண்ணகியா? இதெல்லாம் ரொம்ப ஓவர் சீறிய சேகுவேரா!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விவகாரம் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து,செய்தியாளர்களிடம் பேசிய, குஷ்பு, சென்னைக்கு வந்த 38 வருஷமா நான் கண்ணகியாதான் வாழ்ந்துட்டு இருக்கேன். எப்போதும், மனசில் பட்டதை, பேசுவேன், மனதில் பட்டதை செய்வேன். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பேசி இருந்தார். பல நடிகர்களுடன் நெருக்கமாக ஆபாசமாக நடித்து விட்டு ஓவர் ஆக்டிக் கொடுப்பது சரியில்லை என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார்.

BBT Cinema சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், இதை வைத்து அரசியல் ஆதாயம் பார்க்கிறீர்களா? என காட்டமான பல கேள்வியை கேட்டு விட்டது. நீதிமன்றம் மட்டுமல்ல சாதாரண மக்களும் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று பேசுகிறார்கள். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண், எனக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்று புகார் கூறினாரா? அதே போல பல மாணவிகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்றும், அந்தப் பெண்ணின் தோழிக்கே, இதே போன்று நடந்து இருக்கிறது என பலர் கொளுத்திப் போடுகின்றனர்

kushboo anna university cheguvera

கண்ணகிக்கு என்ன சம்மந்தம்: இந்த சம்பவம் குறித்து பேசிய குஷ்பு கண்ணகியை பற்றி பேசி இருக்கிறார். மதுரையில் இருந்து கண்ணகி போல கையில் சிலம்புடன் இருக்கிறார். இந்த சம்பவத்திற்கும் கண்ணகிக்கும் என்ன சம்மந்தம். நடிகை குஷ்பு இதைப்பற்றி பேசலாமா? குஷ்புவே பல திரைப்படங்களில் ஆபாசமான காட்சிகளில் நடித்திருக்கிறார். அதைத் தொழில் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்கள். இதுபோன்ற ஆபாசமான காட்சிகளை பார்க்கும் ஆண்கள் தவறான பாதைக்கு போக மாட்டார்களா? சினிமாவில் பாலியல் தூண்டல் இருக்கிறது. இது பாலியல் சீண்டலாக மாறுகிறது இதற்கு காரணம் சினிமா.

மறந்துவிட்டது: சினிமாவில் ஆபாசமாக நடிப்பது கவர்ச்சி காட்டுவது எங்கள் தொழில் என்று அவர்கள் சொல்லிவிட்டாலும் தொழிலில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். பணம் தருகிறார்கள் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடித்து விடலாமா? மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கும் குஷ்பூ முதலில் தான் எப்படி என்பதை தெரிந்து கொண்டு பேச வேண்டும். கடந்த காலத்தில் குஷ்பூ திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்வதில் எந்தவித தப்பும் இல்லை என்று கூறி பேசியது பெரிய அளவு சர்ச்சையானது. அப்படி பேசியதை குஷ்பு மறந்து விட்டாரா? இப்படி பேசிய குஷ்பூ இன்னைக்கு கண்ணகி போல சிலம்பத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதை பார்க்கும் போது எல்லாம் அரசியல் ஆகாயத்திற்காகத்தான் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

பயப்படுவார்கள் : பிரச்சனை நடந்து ஒரு வாரம் வரைக்கும் எந்தவித அறிக்கையும் வெளியிடாமல் அமைதியாக இருந்த குஷ்பு, அண்ணாமலை அழைத்த பிறகு வீதிக்கு வந்து போராடுவது எந்த வகையில் நியாயம். இந்த விஷயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதால், அது அந்த பெண்ணை மேலும், பாதிக்கும், மன உளைச்சலை ஏற்படுத்தும். நாளை இதுபோல எந்த பெண்ணாவது பாதிக்கப்பட்டால், பெரிய பிரச்சனை ஆகிவிடும் என்று வெளியில் சொல்ல பயப்படுவார்கள் என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X