சூர்யாவை கீழே தள்ளிவிட்டார்.. ஜோதிகாவிற்கு மனசு உறுத்துது.. விளாசிய பிரபலம்!
சென்னை: மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் 7ந் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே படம் குறித்து மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டு இருந்த நிலையில், ஜோதிகா பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து, பேசிய சினிமா பிரபலர் ஜோதிகாவால் தான் சூர்யாவிற்கு இந்த நிலைமை என கடுமையாக கண்டித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படம், பான் இந்தியா திரைப்படமாக 10 மொழிகளில் உலகளவில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே, பார்த்த அனைவரும் படம் குறித்து இரைச்சலாக இருக்கிறது, சூர்யாவின் உழைப்பு வீணாகிவிட்டது, சிறுத்தை சிவா, சூர்யாவை வச்சு செய்துவிட்டார் என நெகடிவ்வான விமர்சனங்கள் சோசியல் மீடியாவை அலறவிட்டன

ஜோதிகா கருத்து: இதையடுத்து, சூர்யாவின் மனைவி ஜாேதிகா இது குறித்த காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த பதிவை சூர்யாவின் மனைவியாக இல்லை, ஒரு சினிமா ரசிகையா எழுதுகிறேன். நிச்சயமாக முதல் 1/2 மணிநேரம் ஒலி இரைச்சலாக இருக்கிறது! பெரும்பாலான லிண்டியன் படங்களில் குறைபாடுகள் ஒரு பகுதியாகும், எனவே இது மிகவும் நியாயமானது. முதல் 1அரை மணி நேரம் மட்டும்தான் அப்படி இருக்கிறது மொத்த 3 மணி நேரமும் அப்படி இல்லை. கேமரா வேலைபாடுகள் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காததாக இருந்தது.
நான் சூர்யாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.முதல் ஷோ முடிவதற்கு முன்பே முதல் நாள் கங்குவாவுக்கு இவ்வளவு எதிர்மறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது வருத்தமளிக்கிறது. கங்குவா டீம் பெருமையாக இருங்கள், எதிர்மறையாக கருத்து தெரிவிப்பவர்கள் சினிமாவை உயர்த்துவதற்கு வேறு எதுவும் செய்யவில்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இது தான் காரணம்: இதுகுறித்து Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள சேகுவேரா, ஜோதிகா அவர்கள் மனைவியாக பேசவில்லை ஒரு ரசிகையாக பேசுகிறேன் என்று கூறியிருக்கிறார். அவர் ஏன் ஜெய் பீம் திரைப்படத்தை பற்றி பேசவில்லை. இதற்கு முன் வந்த எந்த திரைப்படத்தை பற்றியும் ஏன் பேசவில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் சூர்யா தமிழ்நாட்டில் இருக்கும் போது எடுத்த படம். இந்தப் படத்தை பத்தி ஜோதிகா பேசுவதற்கான காரணம் உண்டு. ஏன் என்றால், சூர்யாவை பெரிய ஆளாக்குகிறேன் என்று மும்பைக்கு அழைத்து சென்று கீழே தள்ளிவிட்டார். அந்த வருத்தத்தில் தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார். இது நாள் வரை சூர்யாவின் எந்த படம் குறித்தும் கருத்து தெரிவிக்காத ரசிகை ஜோதிகா இந்த படத்திற்கு கருத்து தெரிவித்ததற்கு முக்கிய காரணம் இதுதான். இனிமேல் சூர்யாவிற்கு எந்த படமும் வராது, மறுபடியும் அவர் பழைய படி கடுமையாக உழைக்க வேண்டும்.
மோசமான 20 நிமிட காட்சி: சூர்யாவை வைத்து பெரிய அளவில் வியாபாரம் செய்து ஒரு நல்ல நடிகரை ஜோதிகா வீணாக்கிவிட்டார். ஜோதிகாவே அரை மணிநேரம் படம் மோசம் என்று சொல்லி இருக்கிறார். அவர் சொல்வது போல முதல் 20 நிமிட படத்தை பார்க்கவே முடியில்லை. ஜோதிகா சொல்வது போல யாருமே வேண்டுமென்றே படத்தை விமர்சிக்கவில்லை, படத்தை விமர்சிக்க கூடிய அளவில் தான் பல காட்சிகள் இருக்கிறது.இப்படி ஒரு படத்தை தமிழ் சினிமாவே பார்த்தது இல்லை என்று சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











