Jayam Ravi divorce: இன்று ரவி –ஆர்த்தி.. நாளை சூர்யா–ஜோதிகா? எச்சரித்த சேகுவாரா!
சென்னை: சமந்தா-நாக சைத்தன்யா, தனுஷ்- ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஆகியோரின் விவாகரத்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்களை மட்டுமில்லாமல், திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பத்திரிக்கையாளர் சேகுவாரா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளர்.
அதில் ஜெயம் ரவி செய்த பெரிய தப்பு, வேலையையும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் ஒன்றாக வைத்தது தான். திருமணத்திற்கு பின் ஜெயம் ரவியின் மாமியார் தான் எல்லாத்தையும் பார்த்துக்கொள்கிறார். கால்ஷீட் கொடுப்பது, கதை கேட்பது கதையை தீர்மானம் செய்வது எல்லாமே மாமியார் தான், ஜெயம் ரவி பிரிவதாக அறிவித்தும் கூட, ஆர்த்தி இன்னமும் ஆர்த்தி ரவி என்று போட்டுக்கொள்கிறார்.

விருப்பம் இல்லை: இதற்கு என்ன அர்த்தம், இன்னும் ஜெயம் ரவியின் விவாகரத்து பூர்த்தி ஆகவில்லை என்று அர்த்தம். ஜெயம் ரவிக்கும் இதில் உடன்பாடு இல்லை. இந்த இடத்தில் விவாகரத்து என்பது நிர்பந்தமாக்கப்படுகிறது. ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில் கூட, என் நெருக்கமானவர்களின் தனி உரிமைக்காக நான் இந்த முடிவை எடுத்தேன் என்று தான் சொல்லி இருக்கிறார். அந்த நெருக்கமானவர் யார் ஆர்த்தி, அவருக்காகத்தான் இந்த முடிவை எடுத்துள்ளார்.
சூர்யா-ஜோதிகா: ஜெயம் ரவிக்கு ஒரு நடிகையுடன் தொடர்பு என்றோ, ஆர்த்திக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றோ எந்தவிதமான நெகட்டிவ் விமர்சனமும் வந்தது இல்லை. இதில் பிரச்சனையே மாமியார் தான், திருமணம் ஆகிவிட்டால், அப்பா, அம்மா ஒரு ஸ்டெப் பின்னாடி நிற்க வேண்டும். நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் கணவன் மனைவிக்கு இடையில் வந்து, வாழ்க்கையை கெடுக்கக்கூடாது. இதே சிக்கல் ஜோதிகாவிற்கும் சூர்யாவிற்கும் இருக்கு இதை நான் ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். வேலையையும் தனது தனிப்பட்ட வாழ்க்கையையும் தனித்தனியாக வைத்தால் மட்டும் தான் தப்பிக்க முடியும். இன்று ஜெயம் ரவி, ஆர்த்தி நாளை சூர்யா, ஜோதிகாவாக இருக்கலாம்.
கணவன் மனைவி பிரிந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆர்த்தி, ஜெயம் ரவி 15 வருடம் சேர்ந்து வாழ்ந்துவிட்டார்கள் இனிமேல் விவாகரத்து செய்து என்ன செய்யப்போகிறார்கள் என்று பத்திரிகையாளர் சேகுவேரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
விவாகரத்து கோரி மனு: மேலும், ஜெயம் ரவி, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எனது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும். 2009-ம் ஆண்டு நடைபெற்ற தங்களது திருமணம் செல்லாது என அறிவித்து அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும், எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு வரும் அக்டோபர் 10-ம் தேதி அன்று சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











