பெண்ணின் அம்மா, அப்பாவை ஏன் காட்டல.. செய்த தவறை நியாயப்படுத்தக்கூடாது.. நெப்போலியனை விளாசிய பிரபலம்!

சென்னை: நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயாவின் திருமணம் 7ந் தேதி நடைபெற்ற நிலையில், இந்த திருமணம் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா, நடிகைகள் மேடையில் மகிழ்ச்சியாக நடனமாடியதை காட்ட முடிகிறது, பெண்ணின் அம்மா, அப்பா மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதை ஏன் காட்டவில்லை, ஏன் அவர்களை இருட்டடிப்பு செய்தீர்கள் என்று சேகுவேரா கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவரால் நடக்க முடியாது என்பதால், அமெரிக்காவில் அவருக்காக வீட்டைப் பார்த்து கட்டினார் நெப்போலியன். மகன் தனுஷ் திருமண வயதை எட்டிவிட்டதை அடுத்து அவருக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட நெப்போலியன். இதற்காக அவரின் திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயாவை பேசி முடிக்கப்பட்டு ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

napoleon dhanush

நெப்போலியன் மகன் திருமணம்: தனுஷூக்கு அக்ஷயா என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், 7ந் தேதி ஜப்பானில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என 13 நாள் திருவிழாவாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. தனுஷு திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர்களுக்கு நட்சத்திர ஓட்டலில், ஜப்பானிலேயே மிகவும் பிரபலமான சவுத் இந்தியன் உணவு பரிமாறப்பட்டது. இந்த திருமணத்தை தொடர்ந்து நெப்போலியன் குடும்பத்தோடு டூர் செல்ல இருக்கிறார். அதைத் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காவில் தனுஷூக்கும் அக்ஷயாவிற்கும் திருமணம் நடைபெற இருக்கிறது.

நடிகைகள் அறிவாளிகளா: இவர்களின் திருமணம் குறித்து பலவிதமான விமர்சனங்கள், விவாதங்கள் நடந்து வரும் நிலையில், இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் சேகுவேரா,மகனுக்கு திருமணமான மகிழ்ச்சியில் நெப்போலியன் தனது மனைவியுடன் டான்ஸ் ஆடினார், நடிகைகள் டான்ஸ் ஆடினார்கள், ஆனால் பெண்ணின் அம்மா, அப்பா ஏன் டான்ஸ் ஆடவில்லை, அவர்களின் மகிழ்ச்சியை ஏன் காட்டவில்லை, ஏன் இருட்டடிப்பு செய்தீர்கள் என்பது தான் என் கேள்வி. உங்களுக்கு சரியாக இருக்கும் ஒரு விஷயத்தை, பொது நியாயப்படி தவறாக இருக்கும் ஒரு விஷயத்தை, நியாயப்படுத்தக்கூடாது.

அது சரி என்பதற்காக சில காட்சிகளை திணிப்பது தான் தவறாக தெரிகிறது. நடிகைகள் நெப்போலியன் அப்படி இப்படி என்று புகழ்ந்து பேசுகிறார்கள். நடிகைகள் பெரிய அறிவாளியா? அவர்களுக்கு மற்றவர்களின் வாழ்க்கையில் கருத்து சொல்லும் அளவிற்கு தகுதியானவர்களா? அவர்களின் குடும்பத்தில் இப்படி ஒரு திருமணத்தை செய்வார்களா என்று சேகுவேரா அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X