வளர்ப்பு சரியில்லை.. பணத்திமிர்.. விஜய்சேதுபதியின் மகனை விளாசிய பிரபலம்!

சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக பீனிக்ஸ் என்கிற திரைப்படத்தில் அறிமுகமாக உள்ளார். இந்த படவிழாவில் சூர்யா பேசிய சில கருத்துக்கள் இணையத்தில் பேசு பொருளானதைத் தொடர்ந்து பிரபலம், மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் விஜய் சேதுபதி, முதலில் மகனுக்கு அறிவுரை கூறவேண்டும், இல்லை என்றார் சூர்யாவின் பெயர் கேட்டுவிடும் என்றார்.

விஜய் சேதுபதிக்கு சூர்யா ஏற்கனவே அப்பாவுடன் சேர்ந்து, சுந்துபாத், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யா , பீனிக்ஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.பீனிக்ஸ் படத்தின் அறிமுக விழாவில் பேசிய சூர்யா, 'அப்பா வேற நான் வேற, போஸ்டரில் கூட சூர்யா என்றுதான் போட்டு இருக்கிறோம், சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை என்று பேசி இருந்தது சர்ச்சையானது.

vijay sethupathi surya phoenix

கடுமையான விமர்சனம்: இதைத்தொடர்ந்து அண்மையில், நான் சின்ன வயசில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு பணம் கொடுப்பார். இதனால் தான் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று வந்து இருப்பதாக கூறினார். இவரது பேச்சை கேட்ட இணையவாசிகள், தினமும் 500 தான் கொடுப்பாரா இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சூர்யாவை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

ஆணவமான பேச்சு: இதுகுறித்து பேசிய சேகுவேரா, விஜய்சேதுபதி மகன், அப்பாவின் தயவு இல்லாமல் வந்தேன் என்று சொல்லமுடியாது. விஜய்சேதுபதியின் மகனாக இருப்பதால் தான் நடிக்க வந்தார், இதை மறுக்கவே முடியாது. சூர்யா சேதுபதியின் பேச்சு ரொம்ப ஆணவமான பேச்சாக இருக்கு, அவர் போகிற போக்கில் என் அப்பா தினமும் 500 ரூபாய் தான் செலவுக்கு தருவார் என்று சொல்கிறார். பல பேர், 200 ரூபாய் சம்பளத்திற்கு நாயா பேயா கஷ்டப்படுகிறான். இததெல்லாம் ஒரு பெருமை என்பதற்காக அப்படி சொல்லுகிறான் திடீர் பணக்கார்கள் எல்லாம் அப்படித்தான் பேசுவார்கள்.

பணிவு வேண்டும்: இதற்கு காரணம் வளர்ப்பு சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும் அம்மா, அப்பா ஒழுக்கத்தை சொல்லி வளர்ந்து இருந்தால் அவர் இப்படி பேசி இருப்பாரா?. தத்துவமாக பேசும் விஜய் சேதுபதி முதலில் தனது மகனிடம் பொது இடத்தில் இப்படி பேசக்கூடாது, பணிவோடு பேச வேண்டும் என்பதை மகனுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இப்படி ஆணவத்தோடு, திமிரோடு பேசிய பலர் காணாமலே போய்விட்டார்கள். இப்படியே விஜய்சேதுபதியின் மகன் பேசினால் விரைவில் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று சேகுவேரா இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

போலியான செய்தி: ஆனால், சூர்யா, தினமும் 500 ரூபாயை அப்பா செலவுக்காக கொடுப்பார் என்று எந்த ஒரு பேட்டியிலும் சொல்லவே இல்லையாம். சூர்யாவின் புகைப்படத்துடன் இவ்வாறு போலியான செய்தி பரவியது என உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரித்த போதும், பொய்க்கு எதற்காக நான் பதிலளிக்க வேண்டுமென சூர்யாவின் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X