தினமும் குடி கூத்து.. 50 வயதில் திருமணம் செய்த பிரேம்ஜி.. எதிர்ப்புக்கு காரணம் இதுதான்.. சேகுவேரா!
சென்னை: நடிகர் பிரேம்ஜி அவரைவிட அதிக அளவு வயது வித்தியாசத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தாலும், இந்த திருமணம் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் தான் நடந்தது என்று இந்து பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய சேகுவேரா, தினமும் குடி கூத்துனு இருந்துவிட்டு 50 வயதில் திருமணமா என கேட்டுள்ளார்.
நடிகர் பிரேம்ஜி இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருத்தணியில் எளிமையாக சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அண்மையில், பிரேம்ஜியின் மனைவி இந்து அளித்த பேட்டியில், திருமணத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தம்பி என யாருக்கும் விருப்பமே இல்லை, திருமண போட்டோவில் கூட அவர்கள் நிற்கவில்லை என்பதால், எடிட் செய்து தான் இணைத்தோம். அதிலும், என் தம்பி பிரேம்ஜியிடம் பேசக்கூட விரும்பவில்லை, பிரேம்ஜி பேச முயற்சி செய்தும் அவன் பேசவில்லை என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார்.

எப்படி ஏற்றுக்கொள்வார்கள்: இதுகுறித்து Kingwoods TV யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பத்திரிக்கையாளர் சேகுவேரா, மகளைப் பெற்ற பெற்றோர்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது, மாப்பிள்ளையை அவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் குறைந்தபட்சம் வயது வித்தியாசமாவது சரியாக இருக்க வேண்டும். ஆனால் 15 வயது வித்தியாசம் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறேன் என்றால் எந்த பெற்றோர் அதை ஏற்றுக் கொள்வார்கள்.
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை: காதலித்தோம் திருமணம் செய்கிறோம் என்கிறார்கள், காதல் இன்றைக்கு நன்றாக இருக்கும். இன்னும் 20 வருடங்கள் கழித்து, அவருக்கு 65 வயது இருக்கும் போது, இந்த பெண்ணுக்கு அப்போதுதான் 40 வயது இருக்கும் அந்த காலகட்டத்தில் இவர்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் வாழ்க்கை எழுவதிற்குள்ளேயே முடிந்து விடுகிறது. அப்படி இருக்கும்போது இவ்வளவு வயது வித்தியாசம் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது ஏற்புடையதாக இருக்காது. வாழ்க்கை துணை என்பதே கடைசி வரை உடன் வருவதுதானே.
காலம் போன காலத்தில்: பிரேம்ஜி மட்டும் இல்லை இந்த லிஸ்டில் பலர் இருக்கிறார்கள், இவர்கள் அனைவரும் அப்பன் பெயரை கெடுத்தவர்கள். அப்பன் கஷ்டப்பட்டு கோடி கோடியாக சேர்த்து வைத்த சொத்துக்களை ஜாலியாக செலவு செய்து வருகிறார்கள். இளமையான வயதில், காலா காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல அனைவரும் தினமும் குடி கூத்து, பெண்கள் பின் சுற்றி வாழ்க்கையை தொலைத்துவிட்டு. காலம் போன கடைசியில், வயதான பிறகு காதலிக்கிறேன் என்று இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுகிறார்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
சொத்துக்கு ஆசைப்படாத குடும்பம்: பிரேம்ஜி திருமணம் செய்து கொண்ட அந்த பெண்ணின் குடும்பத்தார், சொத்துக்கு ஆசைப்படுவதாக இருந்திருந்தால் யாரோ ஒருவரை திருமணம் செய்து கொண்டு போகட்டும் என்று நினைத்து இருப்பார்கள். ஆனால் அவர்கள், நல்ல குடும்பமாக இருப்பதால் மகளை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அதே போல அந்த பெண்ணின் தம்பிக்கு நடிகர்கள் குறித்த அனைத்து விஷயங்களும் தெரிந்திருப்பதால் அவர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. உண்மையில் அவர்தான் நல்ல தம்பி, அக்கா வாழ்க்கை இப்படி பாழாகிவிட்டது என்று நினைக்கிறார். அப்படி ஒரு தம்பி கிடைக்க அந்த பெண் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சேகுவாரா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்


Click it and Unblock the Notifications











